பழைய மட்டக்களப்பு – கல்முனை வீதியின் விஸ்தரிப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

unnamed2பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: மிக நீண்ட காலம் புனரமைப்பு செய்யப்படாமல் இருந்து வந்த பழைய மட்டக்களப்பு – கல்முனை வீதியின் விஸ்தரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வீதியின் வேலைகளை ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 31-01-2015 நேற்று சனிக்கிழமை காத்தான்குடி- 05 ஊர் வீதி சின்னப்பள்ளிவாயல் அருகாமையில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் ஹிஸ்புல்லாஹ்வினால் பழைய மட்டக்களப்பு – கல்முனை வீதி வேலைகளை ஆரம்பிப்பதற்கான முதலாவது அடிக்கல் நடப்பட்டதுடன் ஏனைய அடிக்கல் அதிதிகளினால் நடப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் உதவித் தவிசாளர் எம்.ஐ.எம். ஜெஸீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சியாட், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட குறித்த வீதி இரண்டு வழி போக்குவரத்து செய்யக் கூடிய வகையில் அமைக்கப்படவுள்ளதோடு மேலதிகமாக சைக்கிள் மற்றும் செல்லக்கூடிய வகையில் ஒரு வழியும், வடிகானும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment