காத்தான்குடி: சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், வக்பு, அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சும், காத்தான்குடியில் இயங்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த உலமாக்கள், கதீப்மார்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு 31-01-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும், மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் அதிதிகளாக சவூதி அரேபிய நாட்டிலிருந்து வருகைதந்த சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், வக்பு, அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சின் இந்திய உப கண்ட சமய விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அஹமத் இப்னு அலி இப்னு ஸூலைமான் அர் ரூமி , சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், வக்பு, அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சின் ஆலோசகர் கலாநிதி அஷ்ஷெய்க் காலித் இப்னு ஈசா அசீரி, சவூதி அரேபிய கிழக்குப் பிராந்திய அழைப்பு வழிகாட்டல் பிரிவின் உறுப்பினர் கலாநிதி அஷ்ஷெய்க் அஹமத் இப்னு ஹம்து அஸ்ஸயீத் ஆலு அப்துல் காதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்கு நிகழ்வின் சிறப்புரையை சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், வக்பு, அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சின் இந்திய உப கண்ட சமய விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் அஹமத் இப்னு அலி இப்னு ஸூலைமான் அர் ரூமி நிகழ்த்தினார்.
பேற்படி கருத்தரங்கிள் இலங்கையின் நாலா புறங்களிலிருந்தும் சுமார் 500 உலமாக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதில் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி), ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி), ஜம்இய்யதுல் ஷஹ்வதுல் இஸ்லாமியா நலன்புரி அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் காஸீம் (சூரி), காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான அஷ்ஷெய்க் ஏ.எம். அலியார் (றியாதி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.சுபைர், சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ.எல். அப்துல் ஜவாத், மட்டக்களப்பு, காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைகளின் தலைவரும், காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) உட்பட உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment