பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் மீதான தடையை தளர்த்தியது ஐ.சி.சி

Mohammad Amir[1]லாஹூர்: ‘ஸ்பொட் ஃபிக்ஸிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீருக்கு 5 ஆண்டு தடை விதித்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.சி.சி. உத்தரவிட்டது. இந்த தண்டனை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைகிறது.

இந்நிலையில், அமீர் மீதான தடையை தளர்த்தி ஐ.சி.சி. நேற்று உத்தரவிட்டுள்ளது. உள்ளுர் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தான் தவறு செய்ததை அமீர் ஒப்புக்கொண்டதாலும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாலும் அவருக்கு எதிரான தடை தளர்த்தப்பட்டதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த தடையை நீக்கி மறு ஆய்வு செய்யுமாறு ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

amir

Published by

Leave a comment