தொகுதிக்கு 300 வீடுகள் திட்டத்தின் கீழ் காத்தான்குடிக்கு 100 வீடுகளை ஒதுக்கீடு செய்யுமாறு வேண்டுகோள்

azver llb aswerசட்டத்தரணி எம்.ஜ.எம்.அஸ்வர்

காத்தான்குடி: புதிய அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் தொகுதிக்கு 300 வீடுகளை அமைத்து கொடுப்பதாக வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச அன்மையில் அறிவித்திருந்தார்.

கடந்த 20 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்த இது போன்ற திட்டங்களில் ஐ.தே.க ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் மட்டக்களப்பு தொகுதிக்கு ஒதுக்கீடு செய்ய இருக்கும் 300 வீடுகளில் 100 வீடுகளை காத்தானகுடி பிரதேசத்திற்கு ஒதுக்கீடு செய்யுமாரும் தயாரிக்கப்படும் பயனாளிகள் பட்டியலில் வீட்டுத்தேவையுடைய ஐ.தே.க ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி ஆகியோரிடத்தில் சட்டத்தரணி  எம்.ஜ.எம்.அஸ்வர் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதங்களில் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.

Published by

Leave a comment