இற்றைக்கு சுமார் 15 வருடங்களுக்கு முன்னர், டுபாயில் வேலைபார்த்த ஒரு மணமகனை தனது அழகிய மகளுக்கு திருமணம் செய்து வைத்தது கேரளாவில் ஓர் குடும்பம். இப்போது போல் இணையப் பயன்பாடுகள் அன்று அதிகமாக புழக்கத்திலில்லை. திருமணம் முடிந்து முதல் இரவிலிருந்து தான் மீண்டும் டுபாய் திரும்பும் குறுகிய சில நாட்களுக்குள் தனது மனைவியுடன் சேர்ந்துகொண்ட படுக்கைக் காட்சிகளை தனது கமெராவில் படம் பிடித்து,அதனை ஆபாச வீடியோ நிறுவனத்திற்கு பல மில்லியன் பெறுமதிக்கு விற்றான் இந்தக் காமுகன்.
மனைவி சம்மதிக்காத போதும்கூட, ‘ நான் டுபாய் சென்றால் எனக்கு யார் இருக்கா. உன் நினைவுகள் வரும் போதெல்லாம் இந்தக் காட்சிகளைப் பார்த்து நான் மகிழ்ந்துகொள்வேன்’ என மனைவியைப் பலவந்தப்படுத்தி பின்னர் அவளின் சம்மதத்துடன் தனது கமராவில் படம் பிடித்துக்கொண்டான்.
பின்னர் தனது ‘வீடியோ’, ஆபாச நிறுவனங்களின் வீடியோ கெசட்டுக்களாக வெளியாகி இருந்ததை எவ்வாறோ அறிந்துகொண்ட அப் பெண், தற்கொலை செய்துகொண்ட பரிதாபம், இன்னும் ஞாபகம் இருக்கிறது.
இதே போல்தான் இன்று, படித்த பெண்களிலிருந்து பாமரக் குமருகள் வரைக்கும் திட்டமிட்டு இதே பாணியில் ஏமாற்றப்படுகின்றனர். சமூக வலைத்தளத்தின் கட்சிதமான இரகசிய கண்டுபிடிப்பு தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி, தான் பழகும் பெண்களிடம், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ படமெடுத்து அதனை பிளக்மெயில் செய்து சாதிக்க முடியாதவிடத்து, சமூக வலைத்தளங்களில் உலாவ விடுகின்றனர்.
இவ்வாறான காமுகர்கள் ‘பேசிவைக்கும் மாப்பிள்ளை’களாக, ‘உயிரைவிடும் காதல’னாக சமூக வலைத்தளங்களில் தங்களை அறிமுகப்படுத்தி தங்களது வித்தைகளைக் காண்பிக்கின்றனர்.
அரபு நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்லும் அன்றைய பெண்கள், அன்றைய காதல் காலத்தில் இவ்வாறான காமுகர்களை கனவர்களாகவும், காதலர்களாகவும் நம்பி, ‘பச்சை’யாக பேசிய ஆபாச ஒலி நாடாக்கள் அன்று மத்திய கிழக்கிலும், ஊரிலும் உலாவி வந்தன.
இதே வடிவில் இன்று சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றன.
ஓர் பெண்ணின் மானம் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. புகைப்படமானாலும், வீடியோவாக இருந்தாலும், ஓர் பாவச் செயல் என்று கருதியும் பல்லாயிரக்கணக்கான ‘லைக்’கள் விடப்படுகின்றதும் பரிதாபம்.
ஓ.எல். ஏ.எல் பரீட்சையில் நல்லபெறுபேற்றைப் பெற்றவர்கள் மற்றும் பல்லகலைக்கழக மாணவிகள் கூட ஐந்தாம் வகுப்பும் சித்தியடையாத ஓர் காமுகனால் ஏமாற்றப்படுகிறாள். இவர்களுக்கு நவீன சமூக வலைத்தள பாதுகாப்பு தொழிநுட்பம் தெரியாமல் ஏமாறுகிறார்கள். ஆனால் அவன் ஐந்தாம் வகுப்பு சித்தியடையாவிட்டாலும், தொழிநுட்ப மதியால் தன் காலடியில் வீழ்த்துகிறான். சாதிக்கிறான்.
திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களும், காதலர்களும் தங்களது பேச்சை சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆரம்பத்தில் மரியாதையாக தங்களது பேச்சை ஆரம்பித்தாலும், பின்னர் எதையாவது காட்டவேண்டும், பார்க்கவேண்டும் என்ற நிலைக்கு மோசமாக இவர்களின் நிலை சென்றுகொண்டிருக்கின்றன.
தான் விரும்பியவள் கிடைக்கவில்லை, எனது பள்ளிக் காதலி கிடைக்கவில்லை, என்னை ஏமாற்றிவிட்டாள் என்றெல்லாம் ‘சின்னப்பிள்ளத்தன’மா யோசித்து, எப்படியோ பலிவாங்க துடிக்கும் இத்தகையவர்களும் விதிவிலக்கல்ல.
வட்ஸ்அப், ஸ்கைப், மெசன்ஜெர் போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும். உறவினர்களுடன் பேசிய பின்னர் ஸ்கைப் ஐ.டியை கண்டிப்பாக ‘சைன் அவுட்’ செய்யுங்கள். வீடியோ இயக்கத்தை அவதானியுங்கள்.
தெரியாதவர்களுடன் சட்டிங் செய்யாதீர்கள். ஆரம்பத்தில் எழுத்தில் ஆரம்பித்து, அதனைவைத்து உங்களை பலவந்தப்படுத்தி, வீடியோவுக்கு அழைக்கின்றனர். வீடியோவிற்கு வந்தபின்னர் மேலதிகமாக எதிர்பார்க்கின்றனர்.
அமெரிக்க லொட்டரி, மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு, லோன், வெளிநாட்டு லொட்டரி வெற்றி மற்றும் டேட்டிங் என பல இணையத்தள ஏமாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவை இணையப் பயன்பாட்டாளர்களை வலையில் வீழ்த்தி பணத்தைக் கறக்கும் வித்தை. இவற்றிலும் இன்னும் பலர் வீழ்ந்து வருகின்றனர். பலர் மானத்தையும், பணத்தையும் இழந்து வருகின்றனர்.
இதேபோல்தான் ஏதோ ஓர் எதிர்பார்ப்பில் குமரிகளை இலக்குவைத்து இத்தகைய காமுகர்கள் இணையத்தளத்தில் வலை விரித்திருக்கின்றனர்.
மாட்டுவதற்கு முன் யோசிக்க வேண்டும். மாட்டிய பின்னர் தீர்வு தற்கொலையல்ல.
இலங்கையில் இவ்வாறான சம்பவங்களால் அதிகமான மாணவிகள் தற்கொலைக்குச் சென்றிருக்கின்றனர். பலர் வாழ்விழந்து தவிக்கின்றனர்.
சகோதரிகள் இவ்வாறான காமுகர்களிடமிருந்து மிக அவதானமாக இருக்கவேண்டும்.
Published by

Leave a comment