மெல்போன்: மேற்கிந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சுனில்நரீன் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். இந்த நிலையில் உலக கோப்பை போட்டியில் இருந்து சுனில்நரீன் விலகியுள்ளார். இதை மேற்கிந்திய கிரிக்கெட் சபை நேற்று அறிவித்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் அவரது பந்து வீச்சு குறித்து சம்பியன் லீக் போட்டியில் சந்தேகம் எழுப்பப்பட்டது. அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருப்பதாக கூறி இந்திய கிரிக்கெட் சபை நடத்தும் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கபபட்டது.
இதை தொடர்ந்து சமீபத்திய இந்தியாவுக்கு எதிரான தொடர், தென்ஆபிரிக்க பயணத்தில் அவர் இடம் பெறவில்லை. ஆனால் உலக கோப்பை அணியில் இடம் பெற்றார்.தனது பந்து வீச்சை சரி செய்வதற்காக சுனில்நரீன் உலக கோப்பையில் இருந்து விலகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கேள்வி எழுப்பும் முன்பு அவர் விலகியதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக மாற்று வீரரை மேற்கிந்திய கிரிக்கெட் சபை விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது. சுனில்நரீன் விலகியது மேற்கிந்திய அணிக்கு மேலும் பாதிப்பாகும். சகலதுறைவீரர்கள் வரிசையில் உள்ள முன்னாள் தலைவர் பிராவோ, போல்லார்ட் ஆகியோர் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் அந்த அணி ஏற்கனவே பலவீனப்பட்டு இருந்தது. தற்போது சுனில்நரீன் விலகியது மேலும் பலவீனத்தை காட்டுகிறது.
மேற்கிந்திய அணி 1975, 1979 ஆகிய உலக கோப்பையை கைப்பற்றியது. 1983-ம் ஆண்டுக்கு பிறகு அந்த அணி இறுதிப் போட்டிக்கு வந்தது கிடையாது. கடைசியாக 1996-ல் அரை இறுதி வரை நுழைந்து இருந்தது.
Published by
![Rampaul-Narine-celeb_2841403[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/rampaul-narine-celeb_28414031.jpg?w=150&h=113)
![Rampaul-Narine-celeb_2841403[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/rampaul-narine-celeb_28414031.jpg?w=780&h=585)
Leave a comment