சர்வதேச கணக்காய்வு நிறுவனங்களால் ஆராயப்படவிருக்கும் பசில், விமல் கணக்குகள்

Basil[1]கொழும்பு: முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரின் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில் சர்வதேச கணக்காய்வு நிறுவனங்கள் மூலம் ஆராயப்படவுள்ளன. பொருளாதார மற்றும் வீடமைப்பு அமைச்சுக்களை இந்த இருவரும் கொண்டிருந்தனர்.

இதன்படி எம்ஸ்ட் அன்ட் யங் மற்றும் பிரைஸ் வோட்டா கௌஸ் கூப்பர்ஸ் ஆகிய கணக்காய்வு நிறுவனங்கள் குறித்த இரண்டு அமைச்சுக்களின் கணக்குகளை ஆராயவுள்ளன. வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் பணிப்பின் பேரில் இந்த கணக்காய்வுகள் நடத்தப்படவுள்ளன.

இரண்டு அமைச்சுக்களில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியே இந்த கணக்காய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

Published by

Leave a comment