ஸ்ரீலங்கன் விமானசேவையின் புதிய தலைவர் பதவியேற்பு

srilanka– எம்.ஐ. அப்துல் நஸார்

கொழும்பு: துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மற்றும் விமான சேவை இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் ஸ்ரீலங்கன் விமானசேவையின் புதிய தலைவராக திரு.அஜித் டயஸ் பதவியேற்றார். இந் நிகழ்வு ஸ்ரீலங்கன் விமானசேவையின் கொழும்பிலுள்ள அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.

ஆடைக் கைத்தொழிலுடன் தொடர்புடைய திரு.டயஸ் பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் இணைத் தாபகராவார். இவர் பரிஸ்டா ஸ்ரீலங்கா மற்றும் வரையறுக்கப்பட்ட ஜுவலெக்ஸ் வர்த்தக நிறுவனம் ஆகியவற்றின் தலைவராகவும் செயற்படுகின்றார்.

srilanka

இந்நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உரையாற்றுகையில் வர்த்தக அடிப்படையில் இறுக்கமான கொள்கைகளையும் தீர்மானங்களையும் கைக்கொள்வதன் மூலம் தேசிய விமானசேவையில் சுமூகமான செயற்பாடுகளை புதிய அரசாங்கத்தின் விமான சேவை முகாமைத்துவம் உறுதி செய்யும் என நம்பிக்கை வெளியிட்டதோடு இலாபகரமீட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட விமான சேவை முகாமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த நிகழ்வில் உரையாற்றும்போது ஸ்ரீலங்கன் விமானசேவை நிருவாகத்தில் எவ்வித அரசியல் தலையீடுகளும் இருக்காது என வலியுறுத்தியதோடு இலக்குகளை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு தமது நிபுணத்துவத்தையும் பயன்படுத்துமாறு முகாமைத்துவ அங்கத்தவர்களைக் கேட்டுக்கொண்டார்.

Published by

Leave a comment