வார உரைகல் பிரதம ஆசிரியரின் வீட்டின் மீதான தீவைப்பு முயற்சியை NFGG வன்மைக்கக் கண்டிக்கிறது

nfggNFGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: வாரஉரைகல் பிரதம ஆசிரியர் பூவி ரஹ்மத்துல்லாவின் வீட்டுக்குத் தீவைத்த வன்முறை சம்பவத்தை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையான கண்டிப்பதாக அதன் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, சம கால விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்த விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று கடந்த 25.01.2015 ஞாயிற்றுக்கிழமை அதன் காத்தான்குடி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த 16.01.2015 அன்று நள்ளிரவு மேற்படி தீவைப்பு முயற்சி இடம்பெற்றது. இது போன்ற காடைத்தனமான அரசியல் வன்முறை நடவடிக்கைகள் தொடர்ந்தேச்சையாக நடைபெற்று வருகின்றன. இவற்றை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்த அவர், இவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் இதற்குக் காரணமானவர்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ், அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான பொறியியலாளர் MM. பழுலுல் ஹக், ALM. சபீல் ஆகியோரும் உடனிருந்தனர்.

nfgg

Published by

Leave a comment