கே.பீ .ஐ கைது செய்வதா? இல்லையா? – மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளது

kp– எம்.ஐ. அப்துல் நஸார்
கொழும்பு: புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்களை விநியோகம் செய்தவரும் அவ்வியக்கத்தின் பிரதானியுமான குமரன் பத்மநாதன் என்ற கே.பீ ஐ கைது செய்வது அல்லது விசாரணை செய்வது தொடர்பில் எதிர்வரும் ஐந்தாம் (05) திகதி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இருவரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று (27) கட்டளை பிறப்பித்துள்ளது. 

மலேஷியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். தற்போது அவர் முல்லைத்தீவில் செஞ்சோலை சிறுவர் இல்லத்தை நடாத்தி வருகின்றார்.
தான் இலங்கையிருந்து வெளியேறப்போவதில்லை என அண்மையில் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது  

Published by

Leave a comment