இருதய சத்திரசிகிச்சைக்கு உதவி கோரல்

help eravur– ஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: ஏறாவூர்- 06 A, 305, போக்கர் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சகோதரர் அப்துல் நாசர் என்பவரின் எட்டு மாத வயதுடைய அப்துல்லாஹ் என்ற குழந்தைக்கு பிறப்பிலிருந்தே இருதய நோய் இருந்து வருவதால் கொழும்பு லேடி றிச்வே வைத்தியசாலையில் பரிசோதனைக்குட்படுத்திய போது “இருதய வால்பு மாற்று சத்திர சிகிச்சை செய்யவேண்டும் ‘என்று வைத்தியர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இச்சிகிச்சைக்காக எதிர்வரும் 05- 02- 2015 அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி கூறி இருப்பதோடு ,செயற்கை இருதய வால்பு , ஏனைய மருந்துப்பொருட்கள் வெளியிலிருந்து எடுத்து தரவேண்டும் என்றும் கூறி இருக்கின்றனர்.

இக்குழந்தையின் சத்திரசிகிச்சைக்கான மேற்படி வால்பு உட்பட ஏனைய செலவுகளாக சுமார் மூன்று லெட்சம் ரூபா அளவில் செலவாகும் என்று வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.

help eravur

இக்குழந்தையின் பெற்றோருக்கு இப்பணத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதால் உதவும் உள்ளங்களின் உதவியை நாடி நிற்கிறார்.

இக்குழந்தையின் சத்திரசிகிச்சைக்கு உதவுவதன் மூலம் இறைவனின் பொருத்தத்தை பெற்றுக்கொள்வோம்.

தந்தையின் மக்கள் வங்கி கணக்கு இலக்கம்

A. K. NASAR, PEOPLES BANK., ERAVUR. A/C:- 123 2001 70014342

1 (3)

Published by

Leave a comment