நகர சபை உறுப்பினர் நகுசீன் நிலாமுதீன் – செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் சந்திப்பு

unnamedஇர்சாத் ரஹ்மத்துல்லாஹ்

மன்னார்: மன்னார் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மன்னார் நகர சபை உறுப்பினர் நகுசீன் நிலாமுதீனை இன்று மன்னார் உப்புக்குளத்தில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கிராமத்தின் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும், குடிநீர் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட பொது மண்டபம் அமைப்பது தொடர்பில் தமது மகஜரினை மன்னார் நகர சபை உறுப்பினரிடத்தில் கையளித்தனர்.

இது தொடர்பில் கருத்துரைத்த நகர சபை உறுப்பினர் நகுசீன்,

கடந்த காலத்திலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் ஊடாக இப்பிரதேச அபிவிருத்திக்கு பெரும் பணிகள் ஆற்றியதாகவும், இக்கோறிக்கையினையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் கூறினார்.

unnamed

Published by

Leave a comment