அன்பின் SLMC தலைவர் அவர்களுக்கு,
அரசியல் அடக்குமுறை, வன்முறை மற்றும் காடைத்தனம் என்பனவற்றுக்கு எதிராக வாக்களித்தே மக்கள் இந்த மாற்றத்தினை ஏற்படுத்தியினார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததாகும்.
இறுதி நேரத்திலேயே நீங்கள் இணைந்துகொண்ட போதிலும்கூட நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவே தானும் முன்வந்திருப்பதாக நீங்கள் கூறிக்கொண்டிருக்கும் அதேவேளை உங்களின் உள்ளூர்த் தலைவர்களின் ஆதரவுடன் உங்களது கட்சிக்காரர்கள் NFGGக்கு எதிராக மேற்கொள்ளும் காடைத்தனம் மிகவும் கவலையளிக்கின்றது.
நாகரீகமான முற்போக்கான அரசியலை நோக்கிய மாற்றம் நிகழத் தொடங்கிவிட்டிருக்கின்ற நிலையில் உங்களது கட்சியானது அநாகரீகமான அரசியல் கலாச்சாரத்தை ஏன் தொடர்கிறது என்பது எனக்குப் புரியவில்லை. அத்தோடு NFGGக்கு எதிராக உங்களின் கட்சிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் இந்த வன்முறைகளுக்கு நீங்களும் ஆதரவளிக்கிண்றீர்களா என்பதையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
இதற்கான பதிலினையும் எதிர்பார்க்கிறேன்.
பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்,
(தவிசாளர், NFGG)
Published by
![rahuman[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/rahuman1.jpg?w=150&h=122)
Leave a comment