ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டினுடைய இஸ்லாமிய அறிஞர்கள் குழு காத்தான்குடிக்கு விஜயம்

arabi (2)– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் சவூதி அரேபிய நாட்டினுடைய இஸ்லாமிய அறிஞர்கள் குழு காத்தான்குடிக்கு விஜயம் செய்துள்ளனர்.

அங்கு விஜயம் செய்த சவூதி அரேபிய நாட்டினுடைய இஸ்லாமிய அறிஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வை அவரின் காத்தான்குடி காரியாலயத்தில் வைத்து 24-01-2015 நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன் போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

arabi (2)

சவூதி அரேபிய நாட்டின் நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிடுவதற்காக வருகைதந்துள்ள இவ் சவூதி அரேபிய நாட்டு இஸ்லாமிய அறிஞர்கள் குழுவில் சவூதி அரேபிய அல் கஸீம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அபூ ஸூலைமான் அப்துல்லாஹ் ஸாலிஹ் அல் ஹத்லூல், சவூதி அரேபிய சமூக நலன் விரும்பியும் நிதாஉல் கைர் அமைப்பின் தலைவருமான அஷ்ஷெய்க் அபூ ஸாலிஹ் ஹாலித் தாவூத் உட்பட இஸ்லாமிய அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

arabi

இச் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment