மாற்று மருத்துவ ஆரோக்கிய வழிமுறை எனும் தொனிப்பொருளில் ஹோமியோபதி இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

medicine– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாற்று மருத்துவ ஆரோக்கிய வழிமுறை எனும் தொனிப்பொருளில் ஹோமியோபதி இலவச மருத்துவ சிகிச்சை முகாமொன்றும் 24-01-2015 நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனம்,மகாத்மா காந்தி நிலையம் ,சிலோன் ஹோமியோபதி மருத்துவ சங்கம், வட-கிழக்க சர்வமத ஒன்றியம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இவ் ஹோமியோபதி இலவச மருத்துவ சிகிச்சை முகாம் முஸ்லிம் எயிட் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் அப்துல் சலீம் தலைமையில் இடம்பெற்றது.

medicine

இதில் பெரும் திரளான வயோதிபர்கள்,யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

doctor

இதன் போது ஹோமியோபதி இலவச மருத்துவ சிகிச்சை முகாமில் பங்கேற்ற பொது மக்கள் வைத்தியர்களினால் பரிசோதிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனையும்,மருந்தும் வழங்கி வைக்கப்பட்டதாக முஸ்லிம் எயிட்  ஸ்ரீலங்கா நிறுனத்தின் இணைப்பாளர் அஸ்மி தெரிவித்தார்.

Published by

Leave a comment