– Dr. A. L. A. அஹ்மட் ஷியாம் (MBBS)
இஸ்லாம் மனித உயிர் பாதுகாக்கப்படுவதை விரும்புகிறது. மனிதனது மனவேதனை, தாங்க முடியாத துன்பநிலை என்பவற்றுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிசெய்கிறது. மேலும் மனிதனது அமைதி, பாதுகாப்பு என்பன உறுதிப்படுத்தப்படுவதை வழியுருத்துகிறது.
திருக்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா இது பற்றிகூறும்போது,
‘எவரொருவர் ஓர் உயிரை வாழவைக்கிராறோ, அவர் மனிதர்கள் அனைவரையும் வாழ வைத்தவராவார்’. (அல் குர்ஆன் 5:32)
இஸ்லமிய சட்டங்கள் ஒவ்வொரு முஸ்லிமும் தனது சமூகத்துக்கு ஆதரவு வழங்குவதை ஊக்குவிப்பதோடு, அது ஒரு சட்டரீதியான கடமை எனவும் கூறுகிறது.
முஹம்மத் நபி (ஸால்) அவர்கள் இது பற்றி கூறும்போது,
‘எவர் ஒருவர் இவ்வுலகில் ஒரு நம்பிக்கையாளரது துன்பத்தினை தீர்த்துவைப்பாரோ, இறுதிநாளில் அவருக்கு ஏற்படும் மிகப் பெரிய துன்பத்தினை அல்லாஹ் தீர்த்துவைப்பான், மேலும் அவர் துன்பப்பட்டவருக்கு உதவி செய்துகொண்டிருக்கும் காலமெல்லாம் அவருக்கு அல்லாஹ் உதவி செய்து கொண்டிருப்பான்’.
ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமின் சகோதரன். அவன் தனது சகோதர முஸ்லிம் ஒருவருக்கு துன்பம் இழைபதையோ, அநீதி இழைபதையோ விரும்ப மாட்டான்.
எனவே இஸ்லாம் இரத்ததானம் செய்வதை, அது மனிதனது உயிரை காப்பாற்றுகிறது என்றவகையிலும், ஒரு மனிதனது வாழ்வை தக்கவைப்பதற்கு அவசியம் என்ற வகையிலும், கட்டாயமாக்குகிறது.
முஹம்மத் நபி (ஸால்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்தல் ( PHLEBOTOMY OR CUPPING ) மிகவும் பிரயோசனமான மருத்துவ முறை என கூறியுள்ளார்கள்.
இரத்தம் நம் உடலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்த ஓட்டம் இல்லாவிட்டால் நாம் சரியாக செயல்படஇயலாது. அறுவைச் சிகிச்சையின் போதும்இ விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடுசெய்து அவருடைய உயிரைக்காக்கும் பொருட்டு இரத்ததானம் தேவைப்படுகிறது. இரத்ததானம் செய்வதினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் இது முழுக்க முழுக்க தவறான ஒரு கருத்து.
ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒருநேரத்தில் 200 முதல் 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 4 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் போதும். இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.
இரத்ததானம் செய்வதற்கான தகுதிகள்
• இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 50 வயதினை மிகாதவராகவும் இருத்தல்அவசியம்.
• இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 கிராமிற்கு குறையாமலும் 16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
• இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்கு குறையாமல் இருக்க வேண்டும்.
• ஆண்இ பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.
• எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.
• கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.நடைமுறைகள்
• மது அருந்தியவர்கள் இரத்ததானம் செய்ய முடியாது. மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல்அவசியம்.
• புகைப்பிடித்திருப்பின் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது சிறந்தது. ஆகவேபுகையும் மதுவையும் முடிந்த அளவிற்கு தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.
• இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். போதிய உணவுஇஉறக்கம் இரண்டும் மிகவும் அவசியம்.
• இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.
• இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது 4 மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம்செய்ய வேண்டும்.
• இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒருமணி நேரத்திற்கு பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்இரத்த தானம் செய்யக்கூடாதவர்கள்
• கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதை கண்டிப்பக தவிர்க்க வேண்டும்.
எய்ட்ஸ்
மேக நோய்
நீரழிவு நோய்
இரத்த அழுத்தம்
வலிப்பு நோய்• இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
• பெண்கள் மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும
• தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்
• வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் இரத்த தானம் செய்வதை தவிர்ப்பதுநல்லது.
எனவே இஸ்லாம் இரத்ததானம் செய்வதை, அது மனிதனது உயிரை காப்பாற்றுகிறது என்ற வகையிலும், ஒரு மனிதனது வாழ்வை தக்கவைப்பதற்கு அவசியம் என்ற வகையிலும், கட்டாயமாக்குகிறது.
இஸ்லாத்தின் பார்வையில், ஒரு சமூகத்திற்கு இரத்தம் தேவைப்படும் போது இரத்ததானம் செய்வது தனிப்பட்ட ரீதியிலும், சமூக அளவிலும் ஒரு கட்டாய கடமையாக அமைகிறது.
உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்.
Dr. A. L. A. அஹ்மட் ஷியாம் (MBBS)
உப தலைவர் – Movement for Social Wellness (MSW)
NATIONAL HOSPITAL -COLOMBO
Published by
![bloodpotion[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/07/bloodpotion1.jpg?w=88&h=150)
Leave a comment