கோட்டாவின் 8 பில்லியன் வங்கிக் கணக்கு: விசாரணை தொடர்கிறது

Gotabaya[1]கொழும்பு: அரச பொது நிதிக்குச் சேரவேண்டிய சுமார் 8 பில்லியன் பணத்தை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது சொந்தப் பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் வைத்திருந்த விவகாரம் குறித்து விசாரணைகள் நடந்துவருகின்றன. புதிய இராணுவத் தலைமையகத்தை அமைப்பதற்காக இந்தப் பணத்தை தனது பெயரில் உள்ள கணக்கில் வைத்திருந்ததாக கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார்.

இராணுவத் தலைமையகத்துக்கு சொந்தமான காணியை விற்றதில் கிடைத்த இந்தப் பணத்தை தனது பெயரில் இருந்த கணக்கில் வைத்திருப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருந்ததாகவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். எனினும் அரசுக்கு சேரவேண்டிய பணத்தை தனியான கணக்கில் வைத்திருந்தது அரசியலமைப்பை மீறும் செயல் என்று விசாரணையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாடாளுமன்றத்தால் வழங்கப்படுகின்ற சிறப்பு அனுமதியின் பிரகாரம் மட்டுமே வேறு கணக்குகளில் அரச நிதியை வைத்திருக்க முடியும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் அப்படியான அனுமதியைக் கொடுத்திருக்காவிட்டால், அரசுக்கு வரவேண்டிய பணத்தை வேறு கணக்கில் வைத்திருப்பது அரசியலமைப்பை மீறும் செயலாகும்.YKK

அமைச்சரவையினால் இந்த அனுமதியைக் கொடுக்கமுடியாது. நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டு, அந்த அனுமதியின்படி வேறு ஒரு நிதியத்தின் கீழோ அல்லது கணக்குக்கோ இந்தப் பணத்தைக் கொண்டுவந்திருக்க முடியும். இல்லாவிட்டால் இந்த எல்லாப் பணமும் பொது அரச நிதியத்தின் கீழேயே கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும் என்பது தான் சட்டம். அதனை மீறுவது அரசியலமைப்பு மீறல்.

நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரத்துக்கு முரணாக செயற்படுவதற்கு அமைச்சரவையால் முடியாது. நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்டத்தின்படி, நீதிமன்றத்தின் ஊடாக இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும்.

Published by

One response to “கோட்டாவின் 8 பில்லியன் வங்கிக் கணக்கு: விசாரணை தொடர்கிறது”

  1. அரச பணத்தை யாருடையவும் தனிப்பட்ட கணக்கில் வைத்திருக்க நாடாளுமன்றம்கூட அனுமதி வழங்க முடியாது! நாடாளுமன்ற‌த்தின் முக்கிய முதற் கடமையே நாட்டின் யாப்பைப் பாதுகாப்பதே!

    அப்படியிிருக்க யாப்பிற்கு முரணாக எந்த வகையிலும் யாரும் எதனையும் நடைமுறைப்படுத்த முடியாது! யாப்பின் திருத்தம் கூட யாப்பை உருவாக்கிய மக்களின் மூன்றில் இரு பிரிவினரால் மட்டுமே நிறைவேற்ற முடியும்! அதுதான் உண்மையான ஜனநாயகம்!

    நாடாளுமன்றம் மக்கள் அனுமதிக்காது யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்வது ஏற்கப்பட முடியாதது! நாடாளு மன்றத்திற்கு மக்கள் தம் பிரதிநிதிக‌ளை அனுப்பி வைப்பது யாப்பின்படி நாட்டை, மக்களை, வளங்களை நிர்வகிப்பதை உறுதி செய்து கொள்வதற்கே!

Leave a comment