10 வருடங்களைப் பூர்த்தி செய்கிறது காத்தான்குடி அல் மனார்

almanar– அல் மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: எமது அல் மனார் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 04.02.2015 அன்று ஒரு தசாப்த காலப்பகுதி (10 வருடங்கள்) பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டும் எமது இலங்கை நாட்டின் சுதந்திர தினத்தினை முன்னிட்டும் முழு நாள் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.

04.02.2015 அதிகாலை 4:00 மணிக்கு தஹஜ்ஜூத் (நடுநிசித்தொழுகை) தொழுகையிலிருந்து இரவு 10 மணிவரை 3 கட்டங்களாக நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கோயில் குளம் இராணுவ அதிகாரி, பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள் அடங்கலாக புத்தி ஜீவிகள், ஊரிலுள்ள முக்கியஸ்தர்கள் ஆகியோரது பங்கு பற்றுதல்களுடன் இந்நிகழ்வுகள் மிக சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியிருப்பதாகவும் செயலாளர் நாயகம் மும்தாஸ் மதனி கூறினார்.

பயங்கரவாத கோரப்பிடியிலிருந்தும், முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணச்சியினால் அவ்வப்போது நாம் முகங்கொண்ட இனச்சாடல்களிலிருந்தும் விடுபட்ட ஒரு நிலைமையில் இந்த சுதந்திர தினத்தினை மிக கோலாகலமாக கொண்டாடி மகிழ்வதில் நாம் மிகுந்த ஆவலாக இருக்கின்றோம் என்றும் அஷ்ஷெய்க் மும்தாஸ் தெரிவித்தார்.

Published by

One response to “10 வருடங்களைப் பூர்த்தி செய்கிறது காத்தான்குடி அல் மனார்”

  1. Mr.Muthaas , just Remember who started Al-Manaar, and where were you that time
    and the whole kattankudy know who are you and how you captured Al Manaar, for your personal gain and who supported you to do this
    All kaattaankudy people know how huch you gained on that, and what is your capacity

Leave a reply to Pukka Sahib Cancel reply