கிரான்: மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள்சேனை கிராமப் பாடசாலையொன்றின் வகுப்பறை கூரைகளுக்குள் விஷப்பாம்புகள் பிரவேசிக்க தொடங்கியிருப்பதால் இப் பாடசாலை மாணவர்கள் அச்சம் காரனமாக வகுப்பறைகளை விட்டு விலகி மர நிழல்களில் கற்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த துர்ப்பாக்கிய நிலை பொண்டுகள் சேனை கணபதி வித்தியாலய மாணவர்களுக்கே ஏற்பட்டுள்ளது
பாடசாலை விடுமுறை முடிந்ததும் மீள ஆரப்பிக்கப்பட்ட வேளை 4 விஷப் பாம்புகள் வகுப்பறைக்குள் கூரைகளில் தங்கியிருந்ததும் அவை கலைக்கப்பட்டும் ,சாகடிக்கப்பட்டு இல்லாமல் செய்த போதிலும் நேற்று 23-01-2014 காலை பாடசாலைக்குள் மாணவர்கள் வருகை தந்தபோது இரு பாம்புகளை கண்டதாகவும் பீதியடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளை விட்டு விலகி கற்றல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த பாடசாலைக்கு சமீபமாகவுள்ள காட்டு பிரதேசத்திலுள்ள பாம்புகளே வகுப்பறைக்குள் பிரவேசிப்பதாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார திணைக்களத்தின் உதவிகளைப் பெற்று விரைவாக தெளிக்கும் மருந்துகளைக் கொண்டு வகுப்பறைக்குள் பாம்புகள் பிரவேசிக்காதவாறு விரைவான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இவ்விதம் மாணவர்கள் பாம்புகளின் பீதியுடன் முறையான கல்வியை கற்க முடியததென்றும் தெரிவிக்கும் இப் பிரதேச மக்கள் காடுகளை அண்டிய பகுதிகளில் இவ் விதம் பாம்பு பிரவேசம் இருந்தாலும் தற்போதய புதிய தொழிநுட்ப தகவல் பரிமாற்ற கைத் தொலை பேசிகளுடாக சம்பந்தப்பட்ட தடுப்பு அதிகாரிகளுக்கு விரைவாக தகவல் கொடுத்து விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் இப் பகுதி பெற்றோரின் வேண்டுகோளாகும்.
மக்கள் தான் எசமானர்கள் இந்த புதிய ஆட்சியில் என்ற கருத்து நிலவும் இந்த வேளையில் இவ்வாறான பின்தங்கிய பகுதி மாணவர்களின் கல்விக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக செயல்பட வேண்டு மென்று இப் பிரதேச பெற்றோரும் மாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
Published by


Leave a comment