“பதவிகளுக்காக காலத்திற்கு காலம் கட்சி தாவும் சுய நல அரசியல் வாதிகளை ஓரு போதும் கட்சித்தலைமை ஐக்கிய தேசியக் கட்சிகுள் உள்வாங்கக் கூடாது”:VTM முபாரக்

mubarakகாத்தான்குடி: கடந்த காலத்தில் தன்னை வளர்தெடுத்த கட்சிகளை புரம்தள்ளி விட்டு பதவிகளுக்காக காலத்திற்கு காலம் கட்சி தாவும் சுய நல அரசியல் வாதிகளை ஓரு போதும் கட்சித்தலைமை ஐக்கிய தேசியக் கட்சிகுள் உள்வாங்கக் கூடாது என மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரிவுகளுக்கான முகாமையாளர் VTM முபாறக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிக நீண்ட காலமாக பொறுமையோடு கட்சியின் அங்கத்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு பதவிகளுக்காக கட்சி தாவிய போதிலும், மிக உறுதியாக நின்று கட்சியைக் காப்பாற்றி விட்டுக் கொடுப்புடன் அர்பனிப்புக்களை செய்து நாட்டில் நல்லாட்சி மலர வேண்டும் என அரசியல் வியூகமைத்து எதிரணியின் பொது வேட்பாளர் ஒருவரை கட்சிக்கு வெளியிலிருந்து ஜபாதிபதி வேட்ப்பாளராக நிறுத்தி பல அடக்கு முறைகளுக்கும் அஞ்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்து ஊழல் மோசடி குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த எமது ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை பாராட்டுகின்றேன்.

mubarak
VTM முபாறக்

அதேசமயம் கடந்த காலத்தில் ஊழல் மோசடி குடும்ப ஆட்சிக்கு துணை நின்று ஐக்கிய தேசியக் கட்சியை மட்டக்களப்பு மாவட்டத்தில் முழுமையாக அழித்தொழிப்பதில் முழு மூச்சாக செயற்பட்டது மாத்திமின்றி கடந்த தேர்தல் காங்களில் பிரச்சார மேடைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் முஸ்லிம்களை புலிகளுக்கு பலிக்கடாவாக்கினார்கள் என்று தூசித்தவர்கள், ரணில் வந்தால் புலி வரும் என இரவோடு இரவாக சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் ரணில் வந்தால் முஸ்லிம்கள் சொப்பின் பைகளுடன் அகதிகளாக செல்ல வேண்டிவரும் என அச்சுறுத்தியவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும் அர்ப்பனிப்புடன் நல்லாட்சியைக் கொண்டு வருவதற்கு களமிறக்கிய எதிரணியின் பொது வேட்பாளரும் தற்போதைய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களை முகவரியில்லாதவரென்றும், 9ம் தகதி வீதிக்கு வருகின்றவருக்கு முஸ்லிம்கள் ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும் மேடை மேடையாக முழக்கம் இட்டதோடு தனது அரசியல் அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து எதிரணியின் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் அனுமதிகளை மறுத்து ஜனநாயத்தை குழி தோன்றிப் புதைத்து விட்டு 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாக அறிக்கை விடுகின்றார்கள்.

இவர்களை எந்தக் கட்சியும் உள்வாங்குவதற்கு மறுப்புத் தெரிவிக்கின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பின் கதவாலேனும் உள்நுளைவதற்கு எத்தனிக்கின்றார்கள். இவ்வாரான பிற்போக்குத்தனமான சுயநல அரசியல் வாதிகளை ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சி உள்வாங்கக் கூடாது. இவர்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் நல்லாhசியைப் பெற்று தனது பாராளுமன்றக் கதிரையை காப்பாற்றிக் கொள்ளவதற்கு பகிரதப்பிரயத்தனம் செய்து வருவதை அறிய முடிகின்றது.

கடந்த காலங்களில் எதுவித அரச சுகபோகங்களையும் அனுபவிக்காது கட்சிக்காக தங்களை முழுமையாக அர்ப்பனித்து செயற்பட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் போன்றவர்களின் உணர்வுகளை புரம்தள்ளி இவ்வாராதனவர்களை கட்சி ஒருபோதும் உள்வாங்கக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Published by

Leave a comment