எதிர்வரும் ஏழு வருடங்களில் வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்குத் தேவையான முழு வசதிகளையும் செய்துகொடுக்கும் வேலைத்திட்டமொன்று ஆரம்பம்

IMG_6364– ஏ.எல்.எம். தாஹிர்

கொழும்பு: எதிர்வரும் ஏழு வருடங்களில் வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களுக்குத் தேவையான முழு வசதிகளையும் செய்துகொடுக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் புனர்நிர்மாண வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான முகாமையாளர் ஜெய்ம் ரோயோ ஒலிட் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவி லிபியுசே சோகுபோவா ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களை நேற்று (23) அமைச்சின் அலுவலகத்தில் சந்தித்தபோதே இக்கருத்தினைத் தெரிவித்தனர்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இதுவரை 23,000 வீடுகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் 2015ம் ஆண்டுக்குள் வடக்கு கிழக்கில் மேலும் 3,000 புதிய வீடுகளை அமைப்பதற்கும் இதற்கென 14 மில்லியன்

IMG_6364

யூரோக்களை ஒதுக்கியிருப்பதாகவும் அதற்கான கேள்விப்பத்திரங்களை தாங்கள் கோரியிருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக செய்யும் எந்த வேலைத்திட்டத்திற்கும் ஐரோப்பிய ஐன்றியத்தின் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இதன்போது தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் சில குறைபாடுகள் காணப்பட்டதாகவும் அவற்றை முடியுமானளவு குறைத்து மக்களுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பூரண ஒத்துழைப்பை மேலும் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசாங்கம், ஐரோப்பிய ஐன்றியம் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் நெருங்கிய உறவைப் பேண எதிர்பார்ப்பதுடன் அது தற்போது அரசாங்கத்தின் கொள்கை என்பதையும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.

அமைச்சின் செயலாளர் ரஞ்ஜினி நடராஜபிள்ளை, மேலதிகச் செயலாளர் எம்.எம்.நயீமுதீன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Published by

Leave a comment