ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 04 ஆலயங்களில் உண்டியல் மற்றும் மூலஸ்தான கதவுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்திற்கு கண்டனம்

suvaminathan– ஏ.எல்.எம். தாஹிர்

அம்பாறை: ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 04 ஆலயங்களில் உண்டியல் மற்றும் மூலஸ்தான கதவுகளை உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் யுத்த காலங்களில் தமது வணக்கஸ்தலங்களை இழந்து மக்கள் வேதனைக்கு உள்ளாகி தற்போது ஓரளவுக்கு மத வழிபாட்டுத்தலங்களை புனர்நிர்மாணம்செய்து வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டுவரும்போது இவ்வாறான ஈனச் செயல்களைப் புரிந்து மக்களை மேலும் மேலும் சங்கடத்திற்குள் தள்ளிவிட முயற்சிக்கின்றார்கள்.

எனவே இவ்வாறான ஈனச்செயல்களுக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள அமைச்சர் சுவாமிநாதன், நாட்டில் தற்போது மலர்ந்துள்ள நல்லாட்சியில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணமாக இருக்கின்ற யாராக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Published by

Leave a comment