NFGGயின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தலுக்குப் பின்னரான நன்றி தெரிவித்தல் கூட்டம்

unnamed1பழுலுல்லாஹ் பர்ஹான் / NFGG ஊடகப்பிரிவு

கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தலுக்குப் பின்னரான நன்றி தெரிவித்தல் கூட்டம் ஒன்று புதன்கிழமை கொழும்பு-10, விஜயவர்த்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையாக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் MR. நஜா முஹம்மத் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளருமான மாதுலுவாவே சோபித தேரர், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ MA. சுமந்திரன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் கௌரவ முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் MBM. பிர்தௌஸ் நளீமி, ஜனாதிபதி சட்டத்தரணி MM. சுஹைர், சிராஜ் மஸ்ஹூர் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் உள்ளிட்ட கல்விமான்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment