பத்தரமுல்ல: சமூர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3.00 மணிக்கு தமது அமைச்சுப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளார்.
பத்தரமுல்ல செத்சிறிபாயவில் அமைந்துள்ள சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் அமைந்துள்ள பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூலம் தேசிய பட்டியியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான சட்டத்தரணி அமீர் அலி அவர்கள், கடந்த ஆட்சியில் அனர்த்த நிவாரண பிரதி அமைச்சராகவும் பணயாற்றினார். அதன் பின்னர் இடம் பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு மாகாண சபை உறுப்பினராக தெரிவாகி சிறிது காலம் அப்பதவியில் இருந்தார்.
பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்த்த்தின் அடிப்பைடையில் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களுக்கு தேசியப் பட்டியில் பாராளுமன்ற பதவி வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டு நீண்ட காலமாக அது வழங்கப்படாத நிலையில், முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியின் இறுதி நேரத்தில் இந்த பதவியினை கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் போராடி மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்காக பெற்றுக் கொடுத்தார்.
அதனையடுத்து ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி வடக்கிலும் கிழக்கிலும் அதற்கு வெளியிலும் வழங்கிய பங்களிப்பின் பலனாக கிழக்கு மாகாண மக்களையும் கௌரவிக்கும் வகையில் சமூர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சராக எம்.எஸ்.எஸ். அமீர் அலி நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Published by


Leave a comment