எப்போது திருத்தப்படும் ? மக்கள் அங்கலாய்ப்பு !

unnamedஏறாவூர் அபூ பயாஸ்

ஏறாவூர்: மட்டக்களப்பு மாவட்ட மாங்கேணியிலிருந்து குருவிச்சை, மதுரங்கேணிகுளம் போன்ற கிராமங்களுக்கு செல்லும் வீதியே இது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இவ் வீதி பாரியளவில் சேதமாகியிருக்கிறது.

அருகிலுள்ள கிராமங்களில் இருந்து மதுரங்கேணிகுளம் பாடசாலைக்கு பிள்ளைகளை ஏற்றிச் செல்வதற்கான இந்தப் பாதையில் பேரூந்து சேவை முற்றாக தடைப்பட்டிருக்கிறது. இந்த பேரூந்து சேவையை பிள்ளைகள் மட்டுமன்றி ஆசிரியர்கள், விவசாயிகள், கிராமத்தவர்களும் பயன்படுத்தி வந்தனர்.

மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களால் நாளாந்தம் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த வீதியின் தற்போதைய நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கவனிப்பாரற்ற தன்மை தொடரும் நிலையில், இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நிலை தொடருமோ……!?

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment