KCDAயின் வேண்டுகோளுக்கினங்க கிம்மாவினால் குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு

kcda– ஊடகப்பிரிவு, KCDA

கல்குடா: கல்குடா பிரதேசத்தில் சமூக சேவைகள் அடிப்படையில் பல வேலைத்திட்டங்களை செய்துவரும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனமானது அன்மையில் அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க். எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) அவர்கள் உம்ரா கடமையினை நிறைவேற்ற சென்றிருந்தவேளை அதன் செயலாளர் ஜனாப். ஐ.எம். றிஸ்வின்

அவர்களை சந்தித்து மத்ரஸாக்களுக்கு குர்ஆன் பிரதிகள் வழங்க முன்வைத்த கோரிக்கைக்கமைவாக மீராவோடை மற்றும் பதுரியா ஆகிய பிரதேசத்திலுள்ள இரு மத்ரஸாக்களுக்கு குர்ஆன் பிரதிகள் 2015.01.20ஆந்திகதி செவ்வாய்க்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்நிகழ்வானது அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் செயலாளரும், KCDAயின் ஆலோசகர்களில் ஒருவருமான ஜனாப். ஐ.எம். றிஸ்வின், KCDAயின் உபதலைவர் ஜனாப். ஏ.எம்.எம். முர்ஸிதீன், செயலாளர் ஜனாப். எம்.ரீ. ஹைதர் அலி மற்றும் பொருளாளர் ஜனாப். எப்.எம். சிப்னாஸ் ஆகியோரினால் மத்ரஸாக்களின் அதிபர்களிடம் KCDA காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

kcda

kcda (2)

Published by

Leave a comment