கொழும்பு: பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தை இன்று திறந்த பொலிஸார், அங்கிருந்து துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள், ஹெல்மட்டுகள் மற்றும் ஜக்கட்டுகள் என்பவற்றை கைப்பற்றியுள்ளனர்.
23 கொள்கலன்களில் இருந்த 152 ஆயுதங்களே மீட்கப்பட்டுள்ளதோடு இன்னும் நிறைய ஆயுதங்கள் இருந்திருக்கலாம் எனவும் இவை வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள ரக்ன அக்கார தனியார் பாதுகாப்பு சேவையின் ஆயுதக் களஞ்சியத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்த இருந்ததாகவும் வாழைத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து விசாரணைகளின் அடிப்படையிலேயே மேற்படி ஆயுதங்கள் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
Published by

Leave a comment