மட்டக்களப்பு: அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பூரண அதரவோடு களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றி பெற்று ஜனாதிபதியாகிய அதே வேளை ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 1994 அம் ஆண்டிலிருந்து 20 வருடங்களாக எந்நவித அரச உதவிகளும் இன்றி தவிர்க்கும் மட்டு மாவட்ட ஐ.தே.க ஆதரவாளர்களிற்கு உரிய நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2008 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டு மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் சட்டத்தரணி எம்.ஐ.எம் அஸ்வர் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் ஐ.தே.க உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என்ற ஓரே காரணத்திற்காக அவர்களிற்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் உதவிகள் மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சர்களாக ,பிரதிஅமைச்சர்களாக இருந்தவர்கள் பல்வேறு காரணங்களை கூறி ஐ.தே.க ஆதரவாளர்களிற்கு கிடைக்கவிருந்த பல அரச நிவாரணங்களை தொடர்ச்சியாக தடுத்துவந்துள்ளனர்.
மேலும் அரச உதவிகள் தொழில்வாய்ப்பு மானியம் கடனுதவிகள் சுயதொழில் ஊக்கவிப்பு உதவிகள் வீடமைப்பு சமூர்த்தி மற்றும் அரச காணி வழங்கல் தொடர்பில் குறிப்பிடத்தக்க அளவு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு அவர்களுக்கான நிவாரணங்கள் காலதாமதம் இன்றி ஐ.தே.க அரசாங்கத்தின் ஊடாக வழங்குவதற்கு பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவ்வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Published by


Leave a comment