காங்கேயனோடை: காங்கேயனோடை பிரதேசத்தில் 2015 ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு காங்கேயனோடை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களுக்கான விஷேட ஒன்று கூடல் நிகழ்வொன்று காங்கேயனோடை ஈரான் வீட்டுத்திட்ட மஸ்ஜிதுல் றசூல் பள்ளிவாயல் முன்றலில் இடம்பெற்றது.
காங்கேயனோடை முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.கையூம் தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட ஒன்று கூடலில் காங்கேயனோடை அபிவிருத்தி சபையின் விஷேட பிரதிநிதி மௌலவி ஏ.சீ.எம்.றிபாய், காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம்அஸ்பர்இகாத்தான்குடி நகர சபை உறுப்பினர் சியாட், ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) உட்பட உலமாக்கள், ஊர் பிரமுகர்கள், புத்திஜீவிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் இகட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு 2015 ஜனாதிபதி தேர்தலின் பிற்பாடு தற்போதய நிலையில் முஸ்லிம் சமூகம் எவ்வாறு நடந்து கொள்ள என்பது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் விஷேட உரை நிகழ்த்தினார்.
Published by




Leave a reply to Pukka Sahib Cancel reply