“முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவர்கள் கீழ்கானும் விடயங்களுக்கு விடையளிப்பாரா?”

mubarakhizbullahகாத்தான்குடி: “முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவர்கள் கீழ்கானும் விடயங்களுக்கு விடையளிப்பாரா?” என ஐக்கிய தேசியக் கட்சி காத்தான்குடி பிரதேச முகாமையாளர் VTM முபாறக் வினா எழுப்பியுள்ளார். தாங்கள் கடந்த 14ம் திகதி நடாத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின் போது, தான் எவ்வித அதிகார துஸ்பிரயோகத்தினையும் செய்யவில்லை எனவும், முடிந்தால் எனது ஊழல் மோசடிகளை நிரூபித்துக் காட்டுமாறும் பகிரங்கமாக சவால் விடுத்து இருந்தார்.

அவரது கடந்த கால 25 வருட அரசியல் காலத்தில் ஊழல் அதிகார துஸ்பிரயோகம் மோசடி என்பனவற்றை தனது பினாமிகளை வைத்து செய்யவில்லை என்பதை அவரால் மறுக்க முடியுமா?

முன்னாள் பிரதி அமைச்சர் அவர்களே,

உங்களை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட சட்டத்தரணி அப்துல் மர்சூக்கின் வீட்டுக்கு துப்பாக்கி பிரயோகம் செய்து அவரது பதுறியா பிரச்சரா மேடையை அடித்து நொருக்கினீர்களே அது அதிகார துஸ்பிரயோகமில்லையா?

தங்களது கட்சி அரசியலுக்கு முட்டுக்கட்டையாக இருந்தார் என்பதற்காக கிராம உத்தியோகத்தர் லுடுஆ இப்றாகீம் அவர்களின் வீட்டுக்கு துப்பாக்கி பிரயோகம் செய்து அவரையும் அவரது மகனையும் தாக்கி காயப்படுத்தி அவரின் மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொழுத்தியது அதிகார துஸ்பிரயோகம் இல்லையா?

தங்களது கட்சிக்கு எதிராக பதுறியா பாடசாலையில் வாக்கெடுப்பு முகவராக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக MC ஜலால்தீன் என்பவரை கதிரையால் தாக்கி அதே போன்று இன்னும் ஒருவரை கடற்கரையில் கழுத்து மட்டும் புதைத்து விட்டு வந்தீர்களே அது அதிகார துஸ்பிரயோகமில்லையா?

கடந்த நகர சபைத்தேர்தல் காலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினாலும் வெளியூர் மற்றும் உள்ளுர் தனவந்தர்களினாலும் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்க்களை தங்கள் அதிகாரத்தைப் பயண்படுத்தி அரசியல் சட்டங்களை மீறி உங்களது கட்சி வேட்ப்பாளர்களைக் கொண்டு பாடசாலைகளிலும் ஏனைய இடங்களிலும் வினியோகித்தீர்களே அது அதிகார துஸ்பிரயோகமில்லையா?

ஏனையவர்கள் அபிவிருத்தி வேலையே செய்யக் கூடாது என தடுத்து நிறுத்தி குறிப்பாக PMGG யினால் அமைக்கப்பட்ட மேம்பாலம் போன்ற அபிவிருத்தி வேலையை தங்களது அதிகாரத்தை பயண்படுத்தி உடைத்தெரிந்தீர்களே அது அதிகார துஸ்பிரயோகமில்லையா?

முன்னால் SLMC நகர சபையினால் காத்தான்குடிக்கு கொண்டுவரப்பட்ட நவீன பஸ் தரிப்பு நிலையத்தை தன்னை மிஞ்சி எவருத் அபிவிருத்தி வேலைகளை செய்யக் கூடாது என தடுத்து நிறுத்தி பொறியியலாளர் சிப்லி பாறுக்கின் வீட்டுக்கு துப்பாக்கி பிரயோகம் செய்தீர்களே அது அதிகார துஸ்பிரயோகமில்லையா?

ஏழை மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்க PMGG காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தை முறையாக முற்பதிவு செய்து ஏற்பாடு செய்த போது தங்களது அதிகாரத்தை பயண்படுத்தி கலாச்சார மண்டபத்தினை இழுத்து மூடி ஏழை மாணவர்களையும் ஏழைத்தாய்மார்களையும் நடுத்தெருவில் நிற்க வைத்தீர்களே அது அதிகார துஸ்பிரயோகமில்லையா?

இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது ACMC கட்சியின் பொது வோட்பாளரின் கட்சிக் காரியாலயம் தங்களது காடையர்களைக் கொண்டு அடித்து நொருக்கப்பட்ட போது உங்களது காடையர்களினால் தவறி விடப்பட்ட கையடக்க தொலைபேசியை சிப்லி பாறுக்கின் ஆதரவாளர்கள் தனது எடுபிடியை தாக்கி விட்டு கையடக்க தொலைபேசியையும் ரூபா 38.000.00 ஆயிரத்தையும் பறித்துச் சென்று விட்டார்கள் என தங்களது அதிகாரத்தை பயண்படுத்தி பொலிசில் பொய்யாக முறைப்பாடு செய்து அவர்களை வீடு வீடாக தேடவைத்து நீதிமன்றத்தில் நிறுத்தினீர்களே அது அதிகார துஸ்பிரயோகமில்லையா?

mubarak
VTM முபாறக்

தங்களுக்கு அரசாங்கத்தினால் மக்களுக்கு சேவை செய்யவென வழங்கப்பட்ட அமைச்சுக்குறிய வாகனங்களை ஜனாதிபதியின் மகன் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்கு நுவரேலியாவுக்கு கெலிகொப்டரில் சென்று வருவது போன்று தங்களது ரெதிதென்னையில் இருக்கும் மாட்டுப் பன்ணைக்கு றகீம் மௌலவி சென்று வருவதற்கும் அதே றகீம் மௌலவி மன்னாரில் தங்களது பினாமியின் பெயரில் வாங்கப்பட்ட தோட்டத்திற்கு சென்று வருவதற்கும் தேர்தல் காலத்தில் எதிரணியினரின் வீடுகளை தாக்குவதற்கும் பயண்படுத்தனீர்களே அது அதிகார துஸ்பிரயோகமில்லையா? இவ்வாறு தங்களது அதிகார துஸ்பிரயோகங்களை புத்தகமாக பட்டியல் இட்டு வெளியிட முடியும்

மோசடி

கடந்த 1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளமன்ற தேர்தலின் பொது மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தலா ஊருக்கு இரண்டு வருடம் சுழற்சி முறையில் பாரளமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று கட்சித்தலைமையின் வாக்குறுதியை தாங்கள் ஏற்று பள்ளிவாயல் மேடையில் நின்று சத்தியம் செய்து விட்டு அச்சத்தியத்திற்கு மாறு செய்தீர்களே அது மோசடியில்லையா?

சிலிங்கோ புரபிட் செயாரிங் வங்கியில் தாங்கள் மனைவியின் பெயரில் கடனாக பெற்ற பல கோடி ரூபாயை மீளச் செலுத்தாது இன்று வரையும் ஏமாற்றி வருவதோடு காத்தான்குடி அனாதை வீடுதி, முதியோர் இல்லம், வலது குறைந்தோர் பாடசாலை, சம்மேளனம் போன்ற நிறுவனங்களினதும் மற்றும் ஏழைமக்களினதும் பணங்களை இன்னும் வழங்க முடியாது சதி செய்துள்ளீர்களே அது மோசடி இல்லையா?

காங்கேனோடை ஜூம்ஆப் பள்ளிவாயல் ஒன்றுக்குச் சொந்தமான கூவாக்காட்டுக் காணியை ஏமாற்றி எடுத்து உங்களது பினாமி ஒருவரின் பெயரில் மாற்றம் செய்து ஈரான் தூதுவருக்கு கையளித்து பல கோடி ரூபாய்களை ஆட்டை போட்டீர்களே அது மோசடி இல்லையா?

பாலமுனையில் ஒரு ஏக்கர் காணியை வாங்கி பக்கத்திலிருந்த பல ஏக்கர் அரச காணிகளை கூட்டி கள்ளத்தனமாக அடைத்து பாலமுனையையும் காத்தான்குடியையும் இணைக்கும் பிரதான வீதி குன்றும் கழியுமாக காணப்படுகின்ற போது தனது காணியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்ய அரச பணத்தில் தனது காணிக்கு தனியான கொங்ரீட் வீதியமைத்து பலகோடி கணக்கில் கொழுத்த பணத்திற்கு விற்றுப்பிழைத்தீர்களே அது மோசடி இல்லையா?

மஞ்சந்தொடுவாய் மக்களின் சொந்தக் காணியில் சுனாமி குவைத் சிட்டி வீட்டுத் திட்டம் அமைக்கவென தங்களது பினாமி றகீம் மௌலவியின் பெயரில் மொத்தமாக எழுதி அதில் வீடமைத்து தங்களது பினாமிகளுக்கு அதிகளவிலான வீடுகளை வழங்கியதோடு குறித்த காணி ஒரு சேக்கின் காணியென அரசாங்கத்தை ஏமாற்றி அதற்கு பல கோடி ரூபாய்களை ஆட்டை போட எத்தனித்து இறுதியில் அதற்கு பல கோடி ரூபாய் காசோலை எழுதப்படவிருந்த நிலையில் மண்விழுந்ததே அது மோசடி இல்லையா? இதற்கு மேலாக இன்னும் நீங்கள் விரும்பினால் பல மோசடிகளை என்னால் பட்டியல் இடமுடியும்

ஊழல்

நீங்கள் கடந்த 25 வருடங்களாக அரசியலைத் தவிர எவ்வித தொழிலையும் செய்யவில்லை என்பதை இந்த ஊரும் உலகும் அறியும் அதே போன்று உங்களது பினாமிகளான றகீம் மௌலவி, றஊப், றபீக், நாஸர் போன்றவர்களும் எவ்வித தொழிலையும் செய்திருக்கவில்லை ஆனால் இவர்களது வங்கிக் கணக்கினுடாக பல கோடிக்கணக்கான ரூபாய் பணம் பரிமாறப்பட்டுள்ளது அத்தோடு தங்களினதும் பினாமிகளின் பெயரில் உங்களுக்கு மெத்தைப்பள்ளி வீதியில் கடைத்தொகுதி, கடற்கரையில் காணி, மன்னாரில் பல ஏக்கர் காணி, புதிய காத்தான்குடி பெண் மார்க்கட்டுக்குப் பக்கத்தில் பாரிய மாடி வீடு, கொழும்பில் இரண்டு அடுக்குமாடி வீடு ரெதிதென்னையில் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் காணியும் பாரிய மாட்டுப்பன்ணை தங்களின் இன்னுமோர் பினாமி மௌலாவியின் பெயரில் புல்லுமலையில் 150 ஏக்கருக்கும் மேற்பட்ட காணி என எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இருக்கின்றது இவைகள் அனைத்தும் தங்களது உண்மையான ஹலான உழைப்பின் மூலம் சம்பாதித்ததா? அல்லது தாங்கள் கொண்டு வந்த அபிவிருத்தி வேலைகளுக்கு பல லட்சம் கொமிசன் வாங்கினீர்களே அது ஊழல் இல்லையா? இதற்குமேல் ஊழல் விடயங்களை பட்டியல் இட வேண்டுமா?

இவரது மோசடிகளுக்கு துனைபோகவில்லை என்பதற்காக பிரதேச செயலாளரை விட்டு வைக்காத பிரதியமைச்சர் தனது கட்சி அரசிலுக்கு தடையாக இருக்கின்றார் என்பதற்காக தனது உடன் பிறந்த சகோதரியைக் கூட விட்டு வைக்காத பிரதியமைச்சர் இவ்வூழல் விடயத்தில் முறைப்பாடு செய்யும் என்னை விட்டு வைப்பாரா? காலம் பதில் சொல்லும்

இதுவிடயமாக ஊழல்களையும், மோசடிகளையும், அதிகார துஸ்பிரயோகங்களையும் எதிர்க்கின்ற கண்டிக்கின்ற தவ்வா அமைப்புக்களே, உலமாக்களே, புத்தி ஜீவிகளே, பொதுமக்களே அனைவருக்கும் எனது பனிவான வேண்டுகோள்.

எனவே இது விடயமாக நான் இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யவிருப்பதால் பொதுமக்கள் இவர்கள் சம்மந்தமான மேலதிக தகவல்களை எனக்கு வழங்கி உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.

Published by

3 responses to ““முன்னால் பிரதியமைச்சர் ஹிஸ்புள்ளாஹ் அவர்கள் கீழ்கானும் விடயங்களுக்கு விடையளிப்பாரா?””

  1. அருமையான ஆக்கம். சவால் விட்ட சகோதரர் ஹிஸ்புல்லாஹ் தகுந்த பதில் அளிக்காதவரை தனது ஊழல் மோசடிகளை அகற்ற முடியாது.

    1. Kathe Allarum sollelam Than Athe Unme Andu Nirupiyunha bro

  2. well done bro, i appreciate your iniciative

Leave a reply to Pukka Sahib Cancel reply