கொழும்பு: முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த கோத்தபாய, பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பெருந்தொகை பணத்தை தனது கணக்குகளில் வைப்புச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தவிர வீடமைப்பு, காணி, ரக்னா லங்கா தனியார் பாதுகாப்பு சேவை போன்ற திட்டங்களுக்கு பொது மக்களின் பணத்தை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜே.வி.பி இந்த நிதி மோசடிகள் தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தாலும் அதனை விடவும் பெரும் தொகை சொத்துக்கள் மற்றும் நிதி மோசடிகள் பற்றிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. கோத்தபாய ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆம் ஆண்டுகளாக இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் என்ற பதவியை பயன்படுத்தி கொள்ளை பாணியில் காணிகள் மற்றும் வீடுகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Published by
![Gotabaya[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/gotabaya1.jpg?w=120&h=150)
Leave a reply to Pukka Sahib Cancel reply