மட்டு – பூநொச்சிமுனை பிரதேசத்தில் 71 வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

unnamed3பழுலுல்லாஹ் பர்ஹான்

பூநொச்சிமுனை: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பிரதேசத்தில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு 16-01-2015 இன்று வெள்ளிக்கிழமை பூநொச்சிமுனை இக்றா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

இதன் போது நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வறிய வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.

இங்கு 71 வறிய குடும்பங்களுக்கு   10 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் தையல் இயந்திரம், துவிச்சக்கர வண்டி, இடியப்பம் தயாரிப்பதற்கான உபகரணங்கள் உட்பட சுய தொழில் செய்வதற்கான  பொருட்களை கொள்வனவு செய்வதற்கான காசோலைகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment