காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் நிருவாகத்தின் கீழ் இயங்கும் தாருத் தௌஹீத் இஸ்லாமிய முன்மாதிரி கலாபீடத்தில் புனித அல்குர்ஆன் கல்வியைப் பூர்த்தி செய்து பரீட்சையில் சித்தியடைந்து வெளியேறும் மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 15.01.2015 அன்று ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நிலையத்தின் தலைவர் எம்.ஐ.கே. முஹம்மத் ஜே.பீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அல்குர்ஆன் கல்வியைப் பூர்த்தி செய்து இவ்வருடம் வெளியாகும் 22 மாணவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் 2015ஆம் ஆண்டு முதல் புதிதாக கல்வியைத் தொடரும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன் கற்பித்த ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கான கௌரவிப்பும் மேற்படி நிகழ்வில் கலாபீடத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.பீ.எம்.அன்ஸார் (மதனி) பீ.ஏ அவர்களும் நிருவாகிகள் மற்றும் அதிதிகள், உலமாக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இஸ்லாமிக் சென்றர் நிருவாகத்தின் கீழ் இயங்கிவரும் மேற்படி கலாபீடத்தில் அல்குர்ஆன் ஆரம்பக்கல்வி மற்றும் ஹிப்ழ் வகுப்புக்கள் நடைபெற்று வருவதுடன் வளர்ந்த ஆண், பெண் மாணவர்களுக்கான இஸ்லாமிய அகீதா, மற்றும் பிக்ஹ் சார்ந்த வகுப்புக்கள் அல்குர்ஆன் ஓதத் தெரியாத வளர்ந்த பெண்களுக்கான பயிற்சி வகுப்புக்கள் மற்றும் மாணவர்களுக்கான சிங்கள வகுப்புக்கள், ஆண் மாணவர்களுக்கான சுய கற்றல் நிலையம் என பல்வேறு கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
Published by

Leave a comment