உலக கிண்ண போட்டிக்கு முன்னதாக உளவள ஆலோசனை அமர்வில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி

pakistanலாஹூர்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் அணியினர் அடுத்த வாரம் லாகூரிலிருந்து நியுசிலாந்து செல்லவுள்ளனர். அதற்கு முன்னர் அவர்கள் நன்கு அறியப்பட்ட விளையாட்டு உளவியலாளர் ஒருவரின் உளவள ஆலோசனை அமர்வில் பங்கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விளையாட்டு உளவியலாளர் பாப்ரி, லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் வீரர்களுக்கான ஆலோசனை அமர்வை நடத்தவுள்ளார். உலக கிண்ண போட்டி குறித்து வீரர்களுக்கு உள்ள பயத்தை போக்குவதும், வீரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதுமே இந்த ஆலோசனை அமர்வின் நோக்கம் என உளவியலாளர் பாப்ரி தெரிவித்துள்ளார்.

pakistan

இந்த அமர்வின் போது, 1992ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளின் போது பங்குபற்றிய இன்ஸமாம்-உல்-ஹக் மற்றும் ஜாவிட் மியன்டாட் போன்றோருக்கு தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தோல்வி குறித்து எந்த பயமும் இன்றி, உலக கிண்ண போட்டிக்கு தைரியமாக முகங்கொடுக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் ஷஹர்யார் எம். கான், வீரர்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment