கொழும்பு: வடக்கில் பல்வேறு சம்பவங்கள் இடம் பெறுவதாக தவறான பிரச்சாரங்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேக்த்தின் பேரில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மைத்துனர் ரணசிங்க ரன்துவ முதியன்சலாகே அஜித் குமார என்பவர் கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நன்தரன்பொத்த, குண்டசாலை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடையவரான இவர், நேற்று இரவு குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு சங்கடமான சூழ்நிலையை ஏற்படும் வகையில் தவறான பிரச்சாரம் செய்யதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
Published by

Leave a comment