பிராவோ, பொல்லார்ட் நீக்கப்பட்டது ஏன்?

pollard west indiesபார்படாஸ்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான மேற்கிந்திய அணியில் இருந்து சகலதுறை வீரர்களான பிராவோ, பொல்லார்ட் நீக்கப்பட்டுள்ளனர். உலகின் தலை சிறந்த வீரர்களான இருவரும் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படாதது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இது வேதனையை ஏற்படுத்தியது.

இந்தியாவுக்கு எதிரான தொடரின்போது ஊதிய பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையே சக வீரர் கிறிஸ் கெய்ல் இது தொடர்பாக தேர்வு குழுவினர் மீது கடுமையாக பாய்ந்து இருந்தார்.

பிராவோ, பொல்லார்ட் உலக கோப்பையில் இடம் பெறாதது முட்டாள்தனமானது. பழி வாங்கும் நடவடிக்கை என்று கடுமையாக கூறி இருந்தார். இதற்கிடையே உலக கோப்பை போட்டிக்கான அணி தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டதாக மேற்கிந்திய கிரிக்கெட் சபை தலைவர் கமரூன் வைட் விளக்கம் அளித்து உள்ளார்.

அவர் கூறும்போது, ‘பிராவோ, பொல்லார்ட் ஆட்டம் சமீபகாலமாக மோசமாக இருந்தது. இதன் அடிப்படையில் அவர்கள் உலக கோப்பையில் தேர்வு செய்யப்படவில்லை. இது தொடர்பாக வெளியாகும் காரணங்கள் அடிப்படைய ற்றது.

அணிக்கு அறிவிக்கப்பட்ட 15 பேரும் தகுதி அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டனர். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது” என்றார். இதற்கிடையே மேற்கிந்திய தேர்வு குழு தலைவர் கிளைவ் லொயிட்சை கிண்டல் செய்து பொல்லார்ட் தனது டுவிட்டரில் கார்ட்டூன் வெளியிட்டு உள்ளார்.

மேலும் தங்களுக்கு ஆதரவாக கருத்தை தெரிவித்த கிரிஸ் கெய்லுக்கு அவர் நன்றியும் தெரிவித்து உள்ளார்.

Published by

Leave a comment