கொழும்பு: எமது நீலப்படையணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஸ தலைமையிலான நீலப்படையணிக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க அறிவித்திருந்தார்.
நீலப்படையணி ஊடாக அரச நிறுவனங்களின் வெற்றிடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். இளைஞர், யுவதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டு உண்மையில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சம்பிக்கவின் குற்றச்சாட்டை ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொண்டேன். வழக்குத் தொடர்ந்தால் அதனை எதிர்கொள்ளத் தயார் என நாமல் ராஜபக்ஸ தெரிவித்திருக்கிறார்.
Published by


Leave a comment