சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் புதனன்று காலை ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் என்ன..?

spaceமொஸ்கோ: சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் புதனன்று காலை ஏற்பட்ட பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதை அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’வின் வல்லுநர்கள் அறிய முயன்று வருகிறார்கள். விண்வெளி நிலையத்திலில் உள்ள குளிரவைக்கும் அமைப்பிலிருந்து அம்மோனியா கசிந்ததால் இது நடந்தது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனமான, ராஸ்காஸ்மோஸ் கூறியிருக்கிறது.

ஆனால், நாசா , இது உணர்ந்தறியும் கருவிகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் அல்லது கணினித் தகவல்களை அனுப்பும் பெட்டி ஒன்றில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறுகிறது. இந்தப் பிரச்சனை ஏற்பட்டபின்னர், விண்வெளி நிலையத்தில் இருந்த அமெரிக்க விண்வெளிக்குழுவினர் மூச்சு விட உதவும் கருவியை அணிந்து கொண்டு அருகே இருந்த ரஷ்ய கலனுக்கு சென்றனர். அங்கு அவர்கள் இன்றைய இரவைக் கழிப்பார்கள்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் இத்தாலிய பெண் விண்வெளி வீரர் சாம் கிறிஸ்டொபொரெட்டி தன்னுடைய ட்விட்டர் கணக்கில் எல்லோரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், ரஷ்ய கலனில் நன்றாக இருப்பதாகவும் கூறினார்.

Published by

Leave a comment