கொழும்பு: கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தின் உதவியுடன் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றார் என்ற குற்றச்சாட்டுகள் மீது பொலிசார் விசாரணை ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வி அடைவதாக வாக்கு எண்ணிக்கை காட்டும்போதே தோல்வியை ஒப்புக்கொண்டார். அது போல, வெள்ளியன்று தனது அதிகாரபூர்வ இல்லத்தையும் காலி செய்தார். தேர்தலில் வென்ற மைத்திரிபால சிறிசேனவும் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
ஆனால் புதிய ஜனாதிபதி சிறிசேனவின் சகாக்கள் மஹிந்த ராஜபக்ஷ வாக்கு எண்ணிக்கையை குலைத்து ஒரு அவசர நிலையைப்பிரகடனம் செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டினர். ஆனால் இதற்கு பாதுகாப்புப் பிரிவுகளின் தலைவர்கள் ஒத்துழைக்க மறுத்ததாகவும் அவர்கள் கூறினர்.
இந்தக் குற்றச்சாட்டுகளை பொலிசார் இப்போது விசாரித்து வருகின்றனர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.
Published by

Leave a comment