கொழும்பு: இம்முறை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 8 ஆம் திகதியும் அதற்கு முன்தினமான 7 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்கள் இலங்கையில் உள்ள வங்கிகளில் இருந்து 500 கோடி ரூபா பணத்தை எடுத்துள்ளதாக தற்பொழுது மற்றுமொரு இரகசியம் வெளிவந்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினத்தில் இலங்கை வங்கிகளில் 5ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இது குறித்து நடத்திய விசாரணைகளின் போது இந்த தகவல் கசிந்துள்ளது. இந்த பெருந் தொகை பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவரது ஆலோனைக்கு அமையவே இந்த பணத்தை வங்கிகள் விடுத்துள்ளன.
மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தால் தமது வங்கி கணக்குகள் முடக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக ராஜபக்ஷவினர் தமது வங்கி கணக்குகளில் இருந்த பணத்தை அவசரமாக எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மஹிந்தவினதும் அவரது பாராளுமன்ற சகாக்க்ளினது பைல்கள் தற்பொழுது வெளிவரத் தொடங்கி இருக்கின்ற நிலையில் மென் மேலும் பல விசித்திரங்கள் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது.
Published by


Leave a comment