கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு இரத்த வங்கி கட்டித்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

kalmunai (2)– ஹாசிப் யாஸீன்

கல்முனை: கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு நெதர்லாந்து அரசாங்கத்தின் 3 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீட்டில் 2 மாடிகளைக் கொண்ட இரத்த வங்கி கட்டித்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வு அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கி பெறுப்பதிகாரி டாக்டர் கே.டி.ஜீ.நதீஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியா கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

kalmunai (2)

இதில் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தர முகாமைத்துவ பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிரதம கணக்காளர் பீ.முத்துலிங்கம் உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

kalmunai

இவ்வைத்தியசாலையின் நீண்டகால தேவையாக காணப்பட்ட இரத்த வங்கி நவீன வசதிகளுடன் அமைக்கப்படுவதனால் அம்பாரை மாவட்டதிலுள்ள முஸ்லிம் தமிழ் மக்கள் அதிகம் நன்மையடைவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment