அமெரிக்காவின் மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் செய்தி விநியோகத்தை ‘ஹக்’ செய்தனர் ‘இணைய ஹலிஃபேட்’

isis americaவோஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய ராணுவ கட்டளைப் பிரிவின் ட்விட்டர் செய்தி விநியோகத்தை சட்டவிரோத இணைய தாக்குதல்தாரிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இணைய ஹலிஃபேட் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்தக்குழு, முன்னாள் அமெரிக்க தளபதிகள் மற்றும் தற்போது பதவியிலிருக்கும் தளபதிகள் பெயர்கள் மற்றும் அவர்களது

தனிப்பட்ட தகவல்களையும், ராணுவ உள் விவகார ஆவணங்களையும் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவின் யு ட்யூப் சனலும் சட்டவிரோதமாக ஊடுருவப்பட்டிருக்கிறது.

அதில் பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தியில் ‘ அமெரிக்க சிப்பாய்களே, நாங்கள் வருகிறோம், உங்கள் பின்புறத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

குறித்த இராணுவ மத்திய தளத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள இணைய கலிஃபேட், முகப்பில் ‘அல்லாஹ்வின் பெயரால், அருளாளன், அன்புடையோன்’ எனும் இறைவசனம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (S-90)

isis america

Published by

Leave a comment