வட்டியில்லா சூழற்சி முறை கடன் திட்டத்தின் ஊடாக 20 பேருக்கு 25,000 ரூபாய் வீதம் கடன் வழங்கும் நிகழ்வு

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் யூ.எல்.எம்.என். முபீனின் வேண்டுகோளின் பேரில் முன்னாள் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத்தின் 2014 வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புதிய காத்தான்குடி நூர் சனசமூக நிலையம் ஊடாக வட்டியில்லா சூழற்சி முறை கடன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வட்டியில்லா சூழற்சி முறை கடன் திட்டம் ஊடாக சுமார் 20 பேருக்கு 25,000 ரூபாய் வீதம் கடன் வழங்கும் நிகழ்வு 11-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி நூராணியா பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.

நூர் சனசமூக நிலையத்தின் தலைவர் எச்.எம். றிபாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன் கலந்து கொண்டு மேற்படி 20 பேருக்கு 25000 ரூபாய் வீதம் வட்டியில்லா கடனை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் மர்சூக் அஹமட் லெவ்வை, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றம்ழான், காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி), நூர் சனசமூக நிலையத்தின் செயலாளர் எஸ்.ஐ. யாஸிர் அறபாத் உட்பட பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment