காத்தான்குடி: நடந்து முடிந்த ஜனாபதித் தேர்தலில் முன்னால் அமைச்சர் பஸீர் சேகுதாவூத் அவர்களின் தேர்தல் வியூகம் பிழைத்து விட்டதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் NK. றம்ழான் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் முன்னால் அமைச்சருமான பஸீர் சேகுதாவூத் அவர்கள் நடந்து முடிந்த ஜனாபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நயவஞ்சகத்தனமாக தனது சுயநலத்திற்காக முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் காலடியில் மன்டியிட வைப்பதற்கு மேற்கொண்ட அனைத்து தேர்தல் வியூகங்களும் படுதோல்வி அடைந்துள்ளதுடன், பஸீர் சேகுதாவூத் அவர்களும் தேல்வியடைந்துள்ளார். முஸ்லிம் காங்கிரஸை கடந்த காலத்தில் அரசாங்கத்திற்கு காட்டிக் கொடுத்து மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வைப்பதற்கு பாராளமன்றத்தில் மூன்றில் இரண்டு பொரும்பான்மையை பெற்றுக் கொடுத்து அதற்கு பகிரமாக கட்சித் தலைமைக்குத் தெரியாமல் அமைச்சுப் பதவியும் பெற்றுக் கொண்டார்.
அதற்கு விசுவாசம் காட்டுவதற்கும் தனது எஞ்சசொஞ்ச சலுகைகளை இன்னும் அனுபவித்துக் கொள்வதற்கும் தனது பொருளாதாரங்களை பாதுகாத்துக் கொள்ளவதற்கும் முஸ்லிம் சமூகத்தை முழுமையாக அடகுவைப்பதற்கு பகிரதபிரயத்தனம் செய்தார். இதற்கு கட்சியில் பாரிய எதிர்ப்புக்கள் தோன்றியதோடு எவ்வாராயினும் கட்சியை முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்து முழுமையாக பாதுகாத்து முஸ்லிம் சமூகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப பொதுஅணி வேட்ப்பாளருக்கு ஆதரவு வழங்க கட்சி தீர்மாணித்த போது அதற்கு எதிராக தனக்கு ஆதரவாக ஓர் அணியை கட்சிக்குள் திரட்டி கட்சியை வெளியேற முடியாமல் தடுப்பதற்கு பல்வேறு வியூகங்களை அமைத்ததோடு பல சதிகளையும் மேற் கொண்டு இறுதியில் தோல்வியடைந்துள்ளார்.
இவரது அரசியல் வியூகங்கள் அனைத்தும் அவர் நலன் சார்ந்ததாகவே அமைக்கப்பட்டது கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற அநிதிகள் அடக்கு முறைகள் படுகொலைகள் சொத்து அழிப்புக்கள் கலாச்சாரத்திற்கு எதிரான பல்வேறு அசம்பாவிதங்களின் போது அப்போதைய ஜனாபதியிடமும் பாதுகாப்புச் செயலாளரிடமும் முறையிட்டு தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு தனது அமைச்சுப் பதவிக்காகவும் சுயநலத்திற்காக வாய் திறக்காமல் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்தார்.
ஒரு முறையேனும் அது விடயமாக பாராளமன்றத்தில் குரல் கொடுக்கவில்லை. அடுத்த சமூகத்தவர்கள் குரல் கொடுத்த போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தனது விசுவாசத்தை ஜனாதிபதிக்கு காட்டி வாக்களித்த முஸ்லிம் சமூகத்தை புரக்கனித்து விட்டு முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய ஒரே தலைவர் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தான் என்று வக்காளத்து வாங்கினார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை விட்டு வெளியேறுவதற்கு ஒரு எப்போதும் இல்லாத வகையில் இம்முறை அதிகமான கூட்டங்களை கூட்டி முடிவெடுக்க முடியாமல் கட்சி தலைமை திக்கு முக்காடியது. அதன் பின்னணியில் பஸீர் சேகுதாவூத் அவர்களே இருந்து இறுதிவரையும் தனது விசுவாசத்தை காட்டி வந்தார். இறுதியாக மிக போராட்டத்திற்கு மத்தியில் காலம் தாழ்த்தி இறுதி நேரத்தில் கட்சி பொரும்பான்மையின் தீர்மானத்திற்கு அமைவாக வெளியேறிய போதிலும் தனது சுயரூபத்தை வெளிக்காட்டி மீண்டும் தனது விசுவாசத்தை மகிந்த ராஜபக்ஸவுக்கு காட்டி காதல் கடிதம் எழுதி முஸ்லிம் சமூகத்தை முழுமையாக காட்டிக் கொடுத்து விட்டு முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்தவரிடமே பாதுகாப்பு வழங்குமாறு கோரி காமடி செய்தார்.
அது மாத்திரமல்லாமல் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஜ வெற்றியீட்டுவார் என இறுதிவரையும் அதீத நம்பிக்கை கொண்டிருந்ததோடு அத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் வெற்றி பெற்றதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமைத்துவமும் தனது காலடியில் சரணாகதி அடையும் என கங்கனம் கட்டியிருந்ததோடு தனது தேர்தல் வியூகமும் நிரைவேறப் போவதாக நற்பாசை கொண்டுடிருந்ததோடு அதனை பலருடன் மார்பு தட்டி பகிர்ந்தும் கொண்டார்.
அதன் பின்னர் தான் நினைக்கின்ற வகையில் கட்சியையும் தலைமைத்துவத்தையும் வளைத்துப் போட்டு தனது சுயலாபங்களை அடைந்து கொள்ளலாம் என பேராசை கொண்டிருந்ததோடு கட்சியையும் அதன் தலைமையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம் என திட்டம் தீட்டியிருந்தார். அதிலும் தற்போது மண்விழுந்து விட்டது. எதிர் காலத்தில் இவர்களைப் போன்ற இரட்டை வேடம் போடுகின்ற சுயநலமிக்கவர்களை கட்சிக்குள் நீடித்து நிலைத்து வைப்பது உகந்தல்ல. எதிர் காலத்தில் கட்சி இன்னும் பல்வேறு கூறுகலாக பிளவுபடுவதற்கு இவர்களே காரணியாக அமைவார்கள். அத்தோடு கட்சியும் முஸ்லிம் சமூகத்திடமிருந்து படிப்படியாக தூரமாக்கப்பட்டு கட்சியும் அழிந்து விடுவதற்கான வாய்பு அதிகரிக்கும்.
எனவே இவ்வாரான சுயநல சிந்தனையுடையவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து உடனே இடைநிறுத்தி இவர்களுக்கு எதிர் காலத்தில் இக்கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்காது கட்சித் தலைமை இப்போது கிடைத்திருக்கும் இவ்வறிய சந்தர்ப்பத்தினை தனக்கு சாதகமாகப் பயண்படுத்தி கட்சியை மறைந்த மாபெரும் தலைவரின் கட்டுக்கோப்பான கையாளுமையின் வழியில் தனது கட்டுக்கோப்பில் வழிநடாத்த முயற்சிக்க வேண்டும்.
அத்தோடு இப்புதிய அரசாங்கத்தில் எதுவித பொறுப்பு வாய்ந்த பதவிகளையும் இவர்களுக்கு வழங்காமல் தவிர்த்துக் கொள்வது மிகவும் பொறுத்தமானது எனவும் தெரிவித்தார்.
Published by
![Basheer%20Sekudavuth_CI[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/06/basheer20sekudavuth_ci1.jpg?w=150&h=113)

Leave a reply to M Nakeer Cancel reply