அதிமேதகு ஜனாதிபதி அவர்களே,
இந்த நாட்டில் நல்லாட்சி,சிறுபான்மை சமூகங்களின் விமோசனம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஒரு ஜனாதிபதியாக நீங்கள் இன்று பேசப்படுகின்றீர்கள்.நீங்கள் பொது வேட்பாளராக நியமனம் பெற்றதன் பிறகு உங்களது இந்த வெற்றிக்கு அதிகம் வலு சேர்த்தவராக இருந்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்களின் பங்களிப்பு என்பது வரலாற்றில் ஒரு தனியான இடத்தை பெற்றுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் அமைச்சுப் பதவிகளை வகித்த றிசாத் பதியுதீன் அவர்கள் மிகவும் நேர்மைத்தன்மையுடன் நடந்ததுடன்,அவர் சிறுபான்மை சமூகத்தின் விமோசனத்திற்கும்,உரிமைக்குமாக பேசியவர் என்பதை குறிப்பாக நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.ஏனெனில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் என்ற வகையில்.
இது மட்டுமல்லாது முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராக முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களின் தலைமையின் கீழ் செயற்பட்டதையும் இந்த சந்தர்ப்பத்தில் ஞாபகப்படுத்தவிரும்புகின்றேன்.முன்னால் அமைச்சர் மீள்குடியேற்ற .அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சராக இருந்த போது யுத்தத்தினால் வெளியேறிய 3 இலட்சம் தமிழ் மக்களை தமது சகோரதரர்களை விட மேலாக மதித்து பாதிக்கப்பட்ட சமூகத்தினது அந்த மீள்குடியேற்றத்தை நேர்மையாக செய்து முடித்தார்.அதற்காக வேண்டி பங்கி மூன் மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் வண.ராயப்பு ஜோசப் உட்பட இன்னும் பலர் அவரை வாழ்த்தியதை இங்கு நினைவுபடுத்தவிரும்புகின்றேன்.
வன்னி மாவட்ட மக்களின் அதிகப் படியான வாக்குகளை கடந்த ஜனாதிபதி தேர்தல்களில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுக் கொடுத்தார்.அதன் பிற்பாடு பாரைாளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்திய போது இருவர் தெரிவாவதற்கு இவரது பலம் நிரூபனமானது.அந்த பட்டியிலில் இருந்து வந்தவர்களில் ஒருவர் தான் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,தற்போது இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து விலகி ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
இது இவ்வாறு இருக்க 2015 ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் பொது வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதுடன்,முன்னாள் ஜனாதிபதி அவர்கள் கட்சி மாறுபவர்களின் ஊழல் நிறைந்த பைல்கள் இருப்பதாக கூறிய போது பல அமைச்சர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தள்ளாடிய போது எந்த வித அச்சமமின்றி,என்மீது எவ்வித ஊழல்களும்,மோசடிகளும்,இல்லை என்பதை தைரியமாக ஒப்புவிக்கும் வகையில் உங்கைளை ஆதரிக்க றிசாத் பதியுதீன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி மாகாண சபை உறுப்பினர்களான ஜவாஹிர் ஜனுாபர்,றிப்கான் பதியுதீன்,வீ.ஜயதிலக,எம்.எஸ்.சுபைர்,ஷிப்லீக் பாருக் உட்பட முசலி பிரதேச சபை தலைவர் தேசமான்ய யஹ்யான் உட்பட பிரதேச சபைகளின் தலைவர்கள்,உறுப்பினர்கள் என 71 க்கும் மேற்பட்ட மக்கள் பிரதி நிதிகள்,உயிர் அச்சுறுத்தல்களை கடந்து நல்லாட்சி,மக்களது பாதுகாப்பு,என்பனவற்றை கவனத்திற் கொண்டு மைத்திரி ஆட்சியை ஏற்படுத்த அணியாக வந்தததுடன்,அவர்களைது கீழ் இருந்த பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களும் இணைந்து கொண்டதை நீங்கள் இன்றும் கௌரவப்படுத்துகின்றீர்கள்.
நீங்கள் தேர்தல் பரப்புலைரக்காக மன்னார்,வவுனியா,புத்தளம் பகுதிகளுக்கு வந்த போது,றிசாத் பதியுதீன் அவர்களினால் தனியாக ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் வெள்ளக் கூட்டத்தில் உரையாற்றியதிலிருந்து அவரது மக்கள் பலத்தை அறிந்திருப்பீ்ர்கள்.இது தான் உண்மை தலைவனின் பின்னால் தலைமைத்துவத்தை அங்கீகரித்த அதற்கு கட்டுப்பட்ட மக்களின் விசுவாசம் இருக்கின்றது.அவர் ஒரு சமூக விரோதி,அல்லது ஊழல் மோசடிக்காரர் என மக்கள் நினைத்திருந்தால் இவ்வாறு அலை அலையாக தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் வந்திருப்பார்களா? என்பதை அரசியல் பதவிக்காக சமூகத்தை காட்டிக் கொடுக்கும் கோடறிக்காம்புகள் புரிந்து கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட ஒருசிலர் புதிய ஆட்சியில் இருந்து கொண்டு செயற்படுவது தொடர்பிலும் நீங்கள் கவனம் கொள்ள வேண்டும்.தமது தனிப்பட்ட சில தேவைகளுக்காக அரச அதிகாரிகளுடன் முரண்பாடு கொண்டவர்கள்,முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் நியாயமான அரச அதிகாரிகளுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்று எண்ணியவர்களுக்காக நியாயத்துக்கு எதிராக அவர் செயற்பட மறுத்தது குற்றமா ?
நல்லாட்சியில் நல்லவர்கள் இருக்க வேண்டும் என்ற கருத்தினை மக்கள் நண்பன் என்ற ஒருவர் கடிதமாக உங்களுக்கு எழுதியுள்ளார்.இந்த மக்கள் நண்பன் என்பவர் மைத்திரிக்கு எதிராக கடந்த காலங்களில் செயற்பட்டார் எப்போது எனில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மைத்திரியுடன் இணைந்த பிறகு என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.புத்தளம் அம்மார் மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் ஒரு கட்சி என்பது ஜனநாயக விழுமியங்களை தம்மை உருவாக்கிவர்களின் கருத்துக்களை உள்வாங்க வேண்டும் என்பது தான் நியாயம்.அமைச்சர் றிசாத் அந்த கட்சியின் தேசிய தலைவர் மக்கள் கருத்தறிய கூட்டப்பட்ட கூட்டத்தில் மக்கள் அவருக்கு வழங்கிய ஆணை,நாட்டில் நல்லாட்சியினை ஏற்படுத்த நீங்கள் எடுக்கும் தீர்மானத்திற்கு நா ங்கள் முழுமையாக கடடுப்படுகின்றோம்.எங்களது நலனை விட நாட்டு மக்களது நலனே பெரிது என்று கூறி அவருக்கு முழுமையான ஆதரவை நல்கினர்.அந்த கூட்டத்தில் நானும் ஒருவனாக கலந்து கொண்டிருந்தேன்.அங்கு உலமாக்கள உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டார்கள்,மக்கள் நண்பன் என்பவர் சொல்லுவதை போன்று அங்கு வந்த எந்தவொரு உலமாவும் எந்த எதிர்பார்ப்புக்களுடனும் வரவில்லை.அவர்கள் பணத்துக்கு சோரம் போனவர்கள் அல்ல,அல்லாஹ்வின் நற் கூலிக்காக நற்காரியங்களுக்கு செல்பவர் என்பதையும் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் தமக்கு வாக்களித்த வட புல மக்களுக்கு அதுவும் தனது சமூகம் சார்ந்த மக்களுக்கு தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்துள்ளார்.அதனால் தான் இந்த தேர்தலில் வடக்கு முஸ்லிம்கள்,புத்தளத்தில் இருந்து பல சிரமங்களுக்ககும்,அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும்,வன்னிக்கு சென்று உங்களது வெற்றிக்காக வாக்களித்தனர்.அதுமட்டுல்லாமல் கட்சியின் தலைவர்,முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய நோன்பு நோற்று விஷேட இறை தியானங்களிலும் முஸ்லிம் மக்கள் ஈடுபட்டதை நான் நன்றியுணர்வுடன் நினைவு கூறுகின்றேன்.இஸ்லாமியர்களின் ஆயுதம் என்னவெனில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு கேட்கப்படுகின்ற துஆ பிரார்த்தனை.இதனை இந்த முஸ்லிம்கள் நல்லாட்சிக்காகவும்,உங்களின் வெற்றிக்காகவும் றிசாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில மேற்கொண்டதையும் நினைவுபடுத்த வேண்டும்.
ஆனால் உங்களது வெற்றியினை தடுப்பதற்கும்,மைத்திரிபால சிறிசேன அவர்களின் கூட்டத்திற்கு 100 பேர்கள் வரை மட்டுமே கலந்து கொள்ளவருகைத்தந்தார்கள் என்ற செய்தியினை சொல்வதற்கு உங்களது அணிக்குள் இருந்த ஒருவர் நடவடிக்கை மேற்கொண்ட போதும்,அவரது சுய நலத்தை அறிந்து கொண்ட ஜக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதற்கு இடம் கொடுக்காமல் உண்மையான மக்கள் சக்தியி சொச்தக் காரர் என்று வன்னி மக்கள் கூறும் றிசாத் பதியுதீன் அவர்களிடத்தில் அந்த பணியினை கொடுத்ததையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
வன்னியில் பல இலட்சம் வாக்குகள் தம்மிடம் இருப்பதாக தனியார் தொலைக்கட்சி விவாதங்களில் தோன்றி ஒருவர்,தம்முடன் மக்கள் இல்லை என்பதை ஜக்கிய தேசிய கட்சி தலைமை புரிந்து கொண்டது என்பதற்காக அமைச்சர் றிசாத் அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் பணியில் ஈடுபடுவது தொடர்பில் முழு நாட்டு மக்களும் அறிந்து கொண்டார்கள்.றிசாத் பதியுதீன் ஒரு ஊழல் பேர்வழி,அல்லது குடும்ப அராஜகம் கொண்டவர் என்றால் இந்த தேர்தலில் அவர் சார்ந்திருந்த மைத்திரி அணிக்கு வன்னியிலும்,நாடு பூராகவும் இவ்வாறன அளவு வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருந்திருக்காது என்பது என கணிப்பாகும்.?எது எப்படி இருந்தாலும் இந்த நாட்டின் புதிய அரசை உருவாக்க முன்னால் அமைச்சர் றிசாத் பதியுதீன் செய்த தியாகங்களை எமது நாட்டின் துறைசார்ந்தவர்கள்,வர்த்க சமூகம் ஒன்று சேர்ந்து நேற்று கொழும்பில் பாரிய பாராட்டு வைபமொன்றினை நடத்தியுள்ளது.அதில் கலந்து கொண்டவர்கள் றிசாத் பதியுதீன் அவர்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து இந்த நாட்டுக்கும்,முஸ்லிம்களுக்கும் வழிகாட்டியதினால் அவரை தேசிய தலைவர்களின் ஒருவரின் பட்டியில் உள்ளீர்க்க வேண்டும் என்று கூறயுள்ளனர்..
தேர்தலில் உங்களை ஏமாற்ற சிலர் முயற்சித்தனர்,ஆனால் அல்லாஹ் அவர்களைது சதித்திட்டங்களை தோற்கடித்து உண்மையினையும்,சத்தியத்தினையும் வெளிப்படுத்தியுள்ளான் என்ற நம்பிக்கை இந்த நாட்டு முஸ்லிம்களிடத்தில் குடிகொண்டுள்ளது என்பதை உங்களது கவனத்திற்கு தருவதுடன்,பணி செய்யக் கூடியவர்களுக்கும்,பதவிகளை அமானிதமாக பேனுபவர்களுக்கும் அமைச்சுப் பதவிகளை வழங்கி நல்லாட்சியினை முன்னெடுங்கள் என்ற ஆழமான வேண்டுகோளையும் முன் வைக்கின்றேன்.
நன்றி
Published by

Leave a comment