இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றது

Cabinetகொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள்  சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 27 அமைச்சர்கள், 9 இராஜாங்க அமைச்சர்களும், 11 பிரதியமைச்சர்களும் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.
 
அமைச்சரவை விவரங்கள்

ரணில் விக்கிரமசிங்க – கொள்கை அமுலாக்கல், பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
ஜோன் அமரதுங்க – கிறிஸ்தவ விவகார அமைச்சு
மங்கள சமரவீர – வெளிவிவகார  அமைச்சு
கரு ஜயசூரிய – புத்தசாசன அமைச்சு
ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு
காமினி ஜயவிக்ரம பெரேரா – உணவு பாதுகாப்பு அமைச்சு
லக்ஷ்மன் கிரியெல்ல – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு
ரவி கருணாநாயக்க – நிதி அமைச்சு
றவூப் ஹக்கீம் – நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சு
சம்பிக்க ரணவக்க – மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சு
ராஜித சேனாரத்ன – சுகாதார அமைச்சு
துமிந்த திஸாநாயக்க – நீர்ப்பாசன அமைச்சு
கபீர் ஹாசிம் – நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு
எம்.கே.டி.எஸ். குணவர்தன – காணி அமைச்சு
சஜித் பிரேமதாச – வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சு
விஜேதாச ராஜபக்ஷ – நீதி அமைச்சு
கஜயந்த கருணாதிலக – ஊடகத்துறை அமைச்சு
அர்ஜூன ரணதுங்க – துறைமுக அமைச்சு
ரிஷாத் பதியுதீன் – கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு
அகிலவிராஜ் காரியவசம் – கல்வி அமைச்சு
டி.எம்.சுவாமிநாதன் – மீள்குடியேற்ற இந்து மத விவகார அமைச்சு
ரஞ்சித் மதுமபண்டார- போக்குவரத்து அமைச்சு
தலத்தா அத்துகோரள- வெளிநாட்டு வேளைவாய்ப்பு அமைச்சு
சந்திராணி பண்டார- பெண்கள் விவகார அமைச்சு
பி.திகாம்பரம்- பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சு
நவீன் திஸாநாயக்க- சுற்றுலாத்துறை அமைச்சு
ஹரிசன்- சமூகசேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சு

இராஜாங்க அமைச்சர்கள்

நந்தமித்ர ஏக்கநாயக்க – கலை கலாசார ராஜாங்க அமைச்சு
பைசர் முஸ்தபா – விமான போக்குவரத்து அமைச்சு
பாலித ரங்கே பண்டார – மின்வலு மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சு
துலிப் வெத ஆராச்சி – மீன்பிடி ராஜாங்க அமைச்சு
ரோசி சேனாநாயக்க – சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சு
ரஜீவ் விஜேசிங்க – உயர்கல்வி ராஜாங்க அமைச்சு
ருவன் விஜேவர்தன – பாதுகாப்பு ராஜாங்க அமைச்சு
நிரோஷன் பெரேரா – இளைஞர் விவகார ராஜாங்க அமைச்சு
கே.வேலாயுதம் – பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சு

பிரதியமைச்சர்கள்

சம்பிக பிரேமதாச – கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சு
ஹர்ஷ டி சில்வா – நிதி விவகாரங்கள் மற்றும் கொள்கை செயல்படுத்தல் பிரதி அமைச்சு
ஹெரான் விக்ரமரத்ன – நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சு
சுஜீவ சேனாசிங்க –  பிரதி நீதி அமைச்சு
வசந்த சேனநாயக்க – சுற்றாடல் துறை பிரதி அமைச்சு
விஜேகலா மகேஷ்வரன் – பெண்கள் விவகார பிரதி அமைச்சு
அஜித் பி.பெரேரா – வெளிவிவகார பிரதி அமைச்சர்

Cabinet

Published by

Leave a comment