கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் இரண்டு சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் அவரது துணைவியாரும் இன்று அதிகாலை அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 2.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.
முக்கிய பிரபுக்கள் செல்லும் வழியில் இருவரும் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டுபாய் வழியாக அமெரிக்கா, லோஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் விமானத்தில் பசில் மற்றும் அவரது துணைவியார் பயணம் செய்துள்ளனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இளைய சகோதரர் டட்லி ராஜபக்சவும் பாங்கொக் சென்றுள்ளார். ஜனாதிபதி தேர்தல் நடைபெற இரு வாரங்களுக்கு முன்னதாகவே அவர் இலங்கைக்கு சென்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மற்றும் இரண்டு குடும்பங்கள் நேற்று நாட்டை விட்டு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்று சென்னை நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published by
![Basil[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/12/basil1.jpg?w=129&h=150)
Leave a comment