ஜனாதிபதி மைத்திரிபால வெற்றி பெற்றமையை முன்னிட்டு NFGGயின் மகளிர் அணி ஏற்பாடு செய்திருந்த பெண்கள் சந்திப்பு

unnamedNFGG ஊடகப்பிரிவு

காத்தான்குடி: நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால வெற்றி பெற்றமையை முன்னிட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் அணி பெண்களுக்கான சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்து.

மேற்படி சந்திப்பு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் அணி தலைவி சகோதரி அனீஸா பிர்தௌஸ் தலைமையில் அதன் மக்கள் அரங்கில் நடைபெற்றது.

இதன்போது பல்கலைக்கழக விரிவுரையாளர் சித்ரகலா, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மகளிர் அணி இணைப்பாளர் சகோதரி பௌமியா ஷரீப் உள்ளிட்ட மகளிர் உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பெருமளவிலான பெண்கள் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் நளீமி ஆகியோரும் சிறப்புரையாற்றினார்கள்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment