பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: காத்தான்குடி குபா இளைஞர் கழக சமூக எழுச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்வு 11-01-2015 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அல் ஹிறா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.காத்தான்குடி குபா இளைஞர் கழகத்தின் தலைவர் சபீரின் நெறிப்படுத்தலில் காத்தான்குடி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சுஜாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நைறூஸ், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி கலாராணி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா, காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஸமீல், பாடசாலை அதிபர் உட்பட ஊர் பிரமுகர்கள், உலமாக்கள், கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இதன் போது அதிதிகளினால் வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.
Published by

Leave a reply to fowzan Cancel reply