‘வடக்கு- கிழக்கு, மலையக வாக்குகளிலேயே தோற்றுள்ளேன்’: மகிந்த

mahindaஹம்பாந்தோட்டை: வடக்கு, கிழக்குப் பிரதேசங்களிலிருந்தும் மற்றும் மலையகத் தோட்டப் பிரதேசங்களிலிருந்தும் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மற்றபடி, தான் தோல்வி அடைந்ததாகக் கருதவில்லை என்றும் மகிந்த ராஜபக்ஷ தனது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் மக்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையிலிருந்து வெளியேறி ஹம்பாந்தோட்டையில் மெதமுலனவில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு இன்று திரும்பியிருந்தார்.

அங்கு கூடியிருந்த பெருமளவிலான ஊர்மக்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆறுதல் கூறினார்கள். அவரது சொந்த ஊர் மக்கள் கண்ணீர் சிந்தியதையும் காண முடிந்தது.

mahinda

Published by

One response to “‘வடக்கு- கிழக்கு, மலையக வாக்குகளிலேயே தோற்றுள்ளேன்’: மகிந்த”

  1. ஒரு நாட்டில் தேர்தல் நடத்தப்படுவது, ஓர் சீரிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கே! ஜனநாயக மரபில் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படுவதும் அதற்காகவே! தேர்தலின் பின்னர் ஆட்சியாளராகத் தெரிவ செய்யப்படுபவர் எவ்வித, கருத்தது வேறுபாடுகளுமின்றி, நாட்டின் யாப்பு கூறுவது போன்று சட்டத்தால் அனைவரையும் காக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    ஆனால், தேர்தல், முடிந்ததும், ஆதரவாளர்கள், எதிரானவர்கள் என்று வேறுபடுத்தும் நிலை, தனியாள், சமூகம், இனம், மொழி. பிரதேசம் என வளர்ந்து விடுவதற்கு முக்கிய காரணியாக அமைவதில், வாக்களிப்பின் இரகசியத் தன்மை வெளிப்படுவதும் காரணமாகலாம்!

    முழு நாட்டு மக்களும் பங்களிப்புச் செய்து ஒரு அதிபரைத் தமது நிர்வாகியாகத் தெரிவு செய்வதில், இந்நாட்டில் கையாளப்படும், வாக்குச் சீட்டுக்களை எண்ணி, தனித்தனியாக, தபால் மூல வாக்குகள் என்றும், தொகுதிவாரியான வாக்குகள் என்ற ரீதியிலும், முடிவுகள் வெளியிடப்படுவதால், தேர்தலின் நம்பகத் தன்மை குறைகின்றது, அது இரகசியமத் காத்தல் என்ற பண்பிலிருந்து விலிகிச் செல்கின்றது!

    அது, தெரிவாகும், நிர்வாகியின் மனத்தில சில கீறல்களை விரும்பியோ, விரும்பாமலோ ஏற்படுத்தி விடுகின்றது. அவைகளே ஆட்சியின் போது வெளிப்படுவதால், மக்களனைவரையும் பாதுகாப்பது என்ற யாப்பின் மூலக் கருத்து கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது! இதுதான் இந்நாட்டில் நடைபெற்ற ஓரவஞ்சகச் செயல்களுக்கெல்லாம் காரணமாக அமைந்தன.

    அத்தோடு, சில அரசியல்வாதிகளும், கட்சித் தலைமைகளும் அந்நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, தமது விருப்புக்களையும், இழிவான ஆசைகளையும் நிறைவு செய்து கொள்கின்றனர்! இதனால், நாட்டின் த‌லைமை, அதனையே தனது மூலதனமாக்கி, சந்தர்ப்பவாத அரசியலாளரைத் திருப்திப்படுத்தி, தனது தரக்குறைவான விருப்புக்களைச் சட்டமாக்கி, நாட்டை பிழையான வழியில் நிர்வகிக்கும் நிலைமை தோற்றுவிக்கப்படுகின்றது!

    இந்நிலையே, நாட்டின் அரசியல் யாப்பில் ஏற்படுத்தப்பட்ட அதிகமான திருத்தங்கள் என்பதை ஊன்றிக் கவனிப்போர் அறிவர். அதனால், இந்நாடு சீரழிந்த நிலையையும், அந்நிய நாடுகள்கூட தமது ஆக்கிரமிப்பு ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, இந்நாட்டின் குறைகளைத் தமது மூலதனமாக்கிக் கொண்ட பண்புகளும் ஏற்பட்டன என்பதை அறிவர்!

    அவை கடந்த கால அனுபங்களும், இழப்புகளும் என்பதை நினைவிலிருத்தி, தேர்தலில் போது, வாக்கு விபரங்கள், விசேடமாக, ஜனாதிபதித் தேர்தலின் போது, முடிவுகள் அறிவிக்கும் முறையில் மாற்றத்தைக் கொணர வேண்டும்!

Leave a reply to nizamhm1944 Cancel reply